பாங்கொக்கில் அரச அனுசரணையின் கீழ் சியாம் சமூகத்தில் 2023 பெப்ரவரி 04ஆந் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 75 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் வரலாற்று நிகழ்வை தாய்லாந்து இராச்சியத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் விஜாவத் இசரபக்டி ஆரம்பித்து வைத்தார்

 பாங்கொக்கில் அரச அனுசரணையின் கீழ் சியாம் சமூகத்தில் 2023 பெப்ரவரி 04ஆந் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 75 வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் வரலாற்று நிகழ்வை தாய்லாந்து இராச்சியத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் விஜாவத் இசரபக்டி ஆரம்பித்து வைத்தார்

2023 பெப்ரவரி 04ஆந் திகதி பாங்கொக்கில் உள்ள சியாம் சமூகத்தில் அரச அனுசரணையில் நடைபெற்ற இலங்கையின் சுதந்திரத்தின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வரலாற்று நிகழ்வில் தாய்லாந்து இராச்சியத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் விஜாவத் இசரபக்தி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனையால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சமிந்த கொலொன்ன மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் சேனாநாயக்க ஆகியோரின் அழைப்பின் பேரில், தூதுவர்கள், இராஜதந்திர உறுப்பினர்கள், தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்கத்தின் ஏனைய அமைச்சுகள் மற்றும் முகவர் நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தாய்லாந்தில் உள்ள ஏனைய நிறுவனங்கள் மற்றும் இலங்கை சமூகத்தினர் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

தாய்லாந்து இராச்சியத்தின் அரச கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இசைக்கப்பட்டது. பின்னர், தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. துணை அமைச்சர் விஜாவத் மற்றும் தூதுவர் கொலொன்ன ஆகியோர் பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் விஜாவத், 'தேரவாத பௌத்தத்தின் மீது எமது பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட கால சுமூகமான உறவு உள்ளது. இத்தகைய வலுவான அடித்தளங்கள் மற்றும் பகிரப்பட்ட நம்பிக்கைகள் மூலம், நமது நட்பும் ஒத்துழைப்பும் பல்வேறு துறைகளில், குறிப்பாக வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான உறவுகளில் விரிவடைந்து பலப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, நிலையான அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான பொதுவான குறிக்கோளுடன், குறிப்பாக மனித வள அபிவிருத்தி, சமூகம் சார்ந்த அபிவிருத்தி மற்றும் நிலையான சுற்றுலா ஆகியவற்றில் அனுபவங்களையும் அறிவையும் தொடர்ந்தும் பகிர்ந்து வருகின்றோம். 2025 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு நிறைவை நாம் விரைவாக நெருங்கி வருவதால், நாம் ஒன்றாக இணைந்து மெற்கொள்வதற்கு இன்னும் நிறைய இருப்பதாக நான் உறுதியாக நம்புகின்றேன், மேலும் இரு தரப்பினரும் செயற்படுவதற்கு மகத்தான வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த ஆண்டு, இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதுடன், இது இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்தது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் உறுதியுடனும், சர்வதேச சமூகத்தின் உதவியுடனும், உங்கள் நாடு முன்னெப்போதையும் விட வலுவானதாக இருக்கும் என நான் நம்புகின்றேன். இலங்கையின் உண்மையான நண்பன் என்ற வகையில், தாய்லாந்து பொது மற்றும் தனியார் துறைகள் இலங்கைக்கு ஆதரவாக பங்களிப்பதற்காக ஒன்றிணைந்து, நிலைமையைத் தணிப்பதற்கான உதவிகளை வழங்குவதில் உறுதியாக இருந்தது. இது உண்மையில் நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவுகளையும், நமது மக்களுக்கு இடையே உள்ள உறுதியான பிணைப்பையும் குறிக்கின்றது. பொருளாதாரத் துறையில், தாய்லாந்தும் இலங்கையும் எமது சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டை புதிய உயரத்திற்கு மேம்படுத்த உதவும் என நான் நம்புவதுடன், இது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் அதே வேளை, வர்த்தகப் பங்காளிகள் மற்றும் நண்பர்களாக எம்மை இன்னும் நெருக்கமாக இணைக்கும்: எனக் குறிப்பிட்டார்.

தூதுவர் கொலொன்ன தனது வரவேற்புரையில், 'இன்று, 2023 பெப்ரவரி 04, 'நமோ நமோ மாதா - நூற்றாண்டை நோக்கி ஒரு படி' என்ற தொனிப்பொருளின் கீழ், அடுத்த 25 வருடங்களுக்கான புதிய சீர்திருத்தவாத வேலைத்திட்டத்துடன் கூடிய பெருமையுடன், இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதுடன், சுதந்திரம் பெற்ற நூறாவது (100வது) ஆண்டான 2048 ஆம் ஆண்டு வரை, நிலையான அரசாங்கக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் தனது புதிய சீர்திருத்தத் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தத் தொடங்குகின்றது' எனத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் மேலும் நெருக்கடியான சூழலுக்கு உள்ளாகி வருவதாக சுட்டிக்காட்டிய தூதுவர், இலங்கை மக்களுக்கு நல்கிய பல சிந்தனைமிக்க மற்றும் தாராள நன்கொடைகளுக்காக, மாண்புமிகு மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் ஃபிரா வஜிரக்லாவ்சாயுஹூவா, பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, அரசாங்கம் மற்றும் தாய்லாந்து இராச்சியத்தின் நட்பு ரீதியான மக்களுக்கு, குறிப்பாக வெளியுறவு அமைச்சிற்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இலங்கையும் தாய்லாந்தும் 800 ஆண்டுகளுக்கும் மேலான பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்திலிருந்து உருவான வலுவான கலாச்சார மற்றும் மதப் பிணைப்பைக் கொண்டுள்ளதுடன், இரண்டு நாடுகளும் பரிமாற்றுனராகவும், பெறுனராகவும் முக்கிய பங்கைக் கொண்டுள்ள அதே வேளை, இரு நாடுகளினதும் வரலாற்றில் முக்கியமான தருணங்களில் ஆதரவை வழங்குவதாக தூதுவர் தெரிவித்தார்.

இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் தூதுவர் அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் சுதந்திர தின செய்திகள் தூதுவரால் வாசிக்கப்பட்டது.

தாய்லாந்தில் ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளின் போது காட்சிப்படுத்தப்படவுள்ள இலங்கையின் 75வது சுதந்திர தினச் சின்னம், தூதுவர் கொலொன்னவினால் பிரதி அமைச்சர் விஜயவத்திடம் வழங்கி அறிவிக்கப்பட்டது. அவர்கள் பேங்கொக்கில் உள்ள தூதுவர்களுடன் இணைந்து 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர். 'நமோ நமோ மாதா - ஒரு நூற்றாண்டை நோக்கி ஒரு படி' என்ற 75வது ஆண்டு விழாவின் கருப்பொருளைக் குறிக்கும் வீடியோ தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.

தூதுவர் சமிந்த கொலொன்ன மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் சேனாநாயக்க ஆகியோரின் இரவு விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

2023 பெப்ரவரி 04ஆந் திகதி காலை, தூதுவர் சமிந்த கொலொன்ன தேசியக் கொடியை ஏற்றினார். தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மற்றும் இந்து மத குருமார்களால் சமய வழிபாடுகள் நடாத்தப்பட்டன.

வீடியோ இணைப்பு:

https://wetransfer.com/downloads/eec3108b078d31aa7bc3af8ab96900cc20230208151229/b2a28fcb898058278560a817f1f816e120230208151249/0868ff

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

 

2023 பிப்ரவரி 09

Ambassador of Sri Lanka to the Kingdom of Thailand and Permanent Representative to UNESCAP Chaminda Colonne and her spouse Stephan Senanayake.

The event commenced with the singing of the Royal Anthem of the Kingdom of Thailand, followed by the National Anthem of Sri Lanka in the Sinhala and Tamil languages. Thereafter, a two-minute silence was observed in remembrance of all who made the ultimate sacrifice for the nation. Vice Minister Vijavat and Ambassador Colonne inaugurated the event by lighting the traditional oil lamp.

Addressing the gathering Vice Minister Vijavat stated that “Thailand and Sri Lanka have a long history of cordial relations, based on our common faith in Theravada Buddhism. With such strong foundations and shared beliefs, our friendship and cooperation have expanded and strengthened in various areas, particularly in trade and people-to-people ties. Over the years, we have continued to share experiences and knowledge, particularly on human resources development, community-based development and sustainable tourism, with the common goal of achieving sustainable development. And as we are rapidly approaching the 70th anniversary of diplomatic relations in 2025, I strongly believe that there is much more for us to do together, and enormous opportunities for both sides to materialise. Last year, Sri Lanka faced an unprecedented economic hardship, which immensely affected the livelihoods of the Sri Lankan people. I am, however, confident that with the strong determination of the Government and people of Sri Lanka, coupled with the assistance from the international community, your country will be back stronger than ever before. As a faithful friend of Sri Lanka, Thailand was also determined to extend assistance to help alleviate the situation, with the Thai public and private sectors coming together to play a part in supporting Sri Lanka. This indeed signifies the strong ties between our two countries and the sturdy bond between our peoples. In the economic sphere, I was greatly pleased to see that Thailand and Sri Lanka have resumed negotiations on our Free Trade Agreement (FTA). I believe that an FTA would help boost our trade and investment to new heights, which would benefit the two countries, and bring us even closer together as trade partners and friends”.

In her  welcoming remarks Ambassador Colonne stated that “Today, 04th February 2023, Sri Lanka celebrates the 75th Anniversary of Independence, with pride together with the new reformist programme for the next 25 years, under the theme “Namo Namo Matha - A step towards a Centenary”, where the Sri Lanka Government announces and starts to implement its new reformist plan for the next 25 years for the implementation of a stable Government policy, right until the One hundredth (100th) year of Independence in the year of 2048”.

The ambassador highlighted that the Sri Lankan economy is still undergoing a distressed situation and extended sincere appreciation to His Majesty the King Maha Vajiralongkorn Phra Vajiraklaochaoyuhua, Prime Minister Prayut Chan-o-cha, the Government and the friendly people of the Kingdom of Thailand, especially to the Ministry of Foreign Affairs for several thoughtful and generous donations for the people of Sri Lanka.

The ambassador stated that Sri Lanka and Thailand have a strong cultural and religious bond stemming from the shared Buddhist heritage of more than 800 years, and each country has played a vital role of transmitter and receiver, extending support at crucial moments in the history of the two nations.

The ambassador invited all Sri Lankans to dedicate themselves towards making Sri Lanka a prosperous nation. The independence day messages of President Ranil Wickremesinghe, Prime Minister Dinesh Gunawardena and Minister of Foreign Affairs Ali Sabry were read by the Ambassador.

The logo of the 75th Anniversary of Sri Lanka’s Independence, which will be showcased during upcoming commemorative events in Thailand throughout the year, was declared by presenting it to the Vice Minister Vijavat by Ambassador Colonne. They jointly cut celebratory cake of the 75th Anniversary with ambassadors based in Bangkok. A video clip was also released, marking the theme of the 75th anniversary “Namo Namo Matha - A Step towards a Century”.

The event was concluded with a dinner reception hosted by Ambassador Chaminda Colonne and her spouse Stephan Senanayake.

In the morning of 04th February 2023, Ambassador Chaminda Colonne hoisted the national flag. Religious observances were conducted by Buddhist, Christian, Islam and Hindu clergies at the official residence of the Ambassador.

Link to the video:

https://wetransfer.com/downloads/eec3108b078d31aa7bc3af8ab96900cc20230208151229/b2a28fcb898058278560a817f1f816e120230208151249/0868ff

Embassy and Permanent Mission of Sri Lanka

Bangkok

09 February 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close