பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தற்போதைய 'இலத்தீன் அமெரிக்காவில் இலங்கையை ஊக்குவித்தல்' என்ற விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க, பிரபல பிரேசிலின் தொகுப்பாளர் வில்லியம் இ ஓ முண்டோவுடனான தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார்.
30 நிமிடங்கள் நீடித்த நேர்காணலின் போது, ஒரு தீவு நாடாக இலங்கையின் பன்முகத்தன்மை மற்றும் தனித்துவம் குறித்து தூதுவர் விளக்கினார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கான விஷேட குறிப்புடன், பிரேசிலியர்கள் மற்றும் தென் அமெரிக்கர்களுக்கு இலங்கையில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் வாய்ப்புக்கள் கிடைப்பதை தூதுவர் சுமித் தசநாயக்க எடுத்துரைத்தார்.
சிலோன் தேயிலை கைத்தொழில் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒரு கோப்பை சிலோன் தேநீரை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பான செயல்விளக்கமும் வழங்கப்பட்டது. நுவரெலியா, உட புஸ்ஸல்லாவ, திம்புல, ஊவா, கண்டி, சப்ரகமுவ மற்றும் ருஹூன போன்ற இலங்கையில் காணப்படும் புவியியல் ரீதியான உயரமான சுற்றுலாத் தலங்களின் படங்கள் மற்றும் சிலோன் தேயிலை மாதிரிகள் ஆகியவை வீடியோ ஒளிப்பதிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
காட்சிகள்: https://drive.google.com/file/d/11lbQpZJdejD1zvYdJcap2xtekSHvcTv4/view?usp=drive_web
இலங்கைத் தூதரகம்,
பிரேசில்
2023 ஜனவரி 10