மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர்  தனது கடமைகளைப் பொறுப்பேற்பு

மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர்  தனது கடமைகளைப் பொறுப்பேற்பு

அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா  ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தித் சமரசிங்க, 2022 டிசம்பர் 12ஆந் திகதி மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

துணைத் தூதரக ஊழியர்களிடம் உரையாற்றிய துணைத் தூதுவர், தனது பதவிக்காலத்தில்  மூன்று மாநிலங்களில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரக சேவைகளை தொடர்ந்தும் சிறப்பாக வழங்குவதுடன், வர்த்தகம், சுற்றுலா அபிவிருத்தி, காலநிலை மாற்றம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதில் கவனம் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

13 வருட அரசியல் அனுபவம் கொண்டவரான நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் சமரசிங்க,  தொழில்துறை, அரச மற்றும் பெருநிறுவனத் துறைகளில் பல பங்குதாரர்களுடன் ஈடுபாடு கொண்டவரும், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சிக்கலான சூழல்களுக்குள் செயற்பட்டுள்ளவருமாவார். இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உற்பத்தி, உட்கட்டமைப்பு, சுற்றுலா, வனவிலங்கு மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்களில் காலநிலை மாற்ற ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அவர் முன்னர் சுற்றுலா, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு மற்றும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றில் கண்காணிப்புப் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

டவரான நியமிக்கப்பட்ட துணைத் தூதுவர் சமரசிங்க முறையே கன்பெரா பல்கலைக்கழகம்  மற்றும் பால் ஸ்டேட் யுனிவர்சிட்டி முன்சி இந்தியானா ஆகியவற்றில் தொடர்பாடல் (பிரதானமாக ஊடகத் தொடர்பாடல்) மற்றும் நுண்கலைகள் - கலை மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கண்டி திருத்துவக் கல்லூரியில் பெற்றார்.

இலங்கையின் துணைத் தூதரகம்,

மெல்போர்ன்

2022 டிசம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close