சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமினின் மறைவுச் செய்தி அறிந்து சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. சீனாவின் தலைசிறந்த தலைவராக இருந்த அவர், மக்களின் நேர்மையான அன்பையும் மரியாதையையும் அனுபவித்தார்.
ஒரு உறுதியான தலைவராகவும், சீனாவுக்கு அதிக பொருள் நன்மைகளை ஏற்படுத்திய சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிசத்தின் வழிகாட்டும் கொள்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவராகவும் திகழும் அவர் சீன மக்களாலும் அவர்களின் உலகளாவிய நண்பர்களாலும் நீண்டகாலமாக நினைவுகூரப்படுவார்.
செப்டம்பர் 1980 இல், பெரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவை ஆய்வு செய்வதற்காக 5 நாள் பயணமாக முன்னாள் ஜனாதிபதி ஜியாங் தலைமையில் இலங்கைக்கு ஒரு தூதுக்குழு விஜயம் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ஷென்சென் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன், இலங்கையின் ஜனாதிபதி ஜயவர்த்தனவின் பொருளாதார தாராளமயமாக்கல் மாதிரியை ஒரு ஆய்வாக சீனா எடுத்துக் கொண்டது. முன்னாள் ஜனாதிபதி ஒரு இளம் பொறியியலாளராகவும், சீனாவின் துணை அமைச்சராகவும் இருந்தபோது இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
சீனப் பொருளாதாரத்தின் அடுத்தடுத்த முன்முயற்சிகள் அற்புதமான முடிவுகளை உருவாக்கிய அதே வேளை, நவீன யுகத்திற்கு சீனாவைத் தள்ளியது.
சி.பி.சி. இன் மூன்றாம் தலைமுறை மத்திய கூட்டுத் தலைமையின் மையத்தில் இருந்த அவர், மூன்று பிரதிநிதிகளின் கோட்பாட்டின் முதன்மை நிறுவனர் ஆவார். அவர் சீனாவின் உலக வர்த்தக அமைப்பு இணைப்பு முயற்சியை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த இழப்பு மற்றும் துக்கத்தின் போது சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எமது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கைத் தூதரகம்,
பெய்ஜிங்
2022 டிசம்பர் 02