
'விளக்குகளின் திருவிழா' என அழைக்கப்படும் தீபாவளி, இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் இந்து, ஜெயின் மற்றும் சீக்கிய சமூகங்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்தத் திருவிழாவின் போது, வீடுகள், கோவில்கள் மற்றும் பணியிடங்கள் எண்ணெய் விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளால் ஒளிரச் செய்யப்படும். பட்டாசு வெடித்தும், கோலம் போட்டும் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. குடும்பங்கள் விருந்துகளில் பங்கேற்பதிலும், இனிப்புகளைப் பகிர்ந்துகொள்வதிலும் (மிட்டாய்) உணவுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது. இந்தத் திருவிழா குடும்பங்களுக்கு மட்டுமல்ல, சமூகங்கள் மற்றும் சங்கங்களுக்கும் வருடாந்த பிணைப்புக் காலமாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தைக் குறிக்கும் வகையில், தென்னிந்தியாவில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 அக்டோபர் 28ஆந் திகதி சான்சரி வளாகத்தில், பிரதி உயர்ஸ்தானிகராலயம், இலங்கை வங்கி, சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள இலங்கை நட்புறவு சங்கம், நலன் விரும்பிகள், முன்னணி வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பிரபலங்கள், பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் தீபாவளி இரவை ஏற்பாடு செய்தது.
தமிழகத்தில் கோவிட்-19 பரவிய பின்னர், தூதரகம் ஏற்பாடு செய்த முதலாவது பொது நிகழ்ச்சி இது என்பதால், பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன், 2021 ஆம் ஆண்டு முதல் தூதரகம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த சுருக்கமான விவரத்தை வழங்கினார். மேலும், அவர் தென்னிந்திய நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியான எஸ்.வீ. சேகரின் புத்தகங்களை நன்கொடையாக ஏற்றுக்கொண்டார்.
பிரதி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வங்கியின் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கை மற்றும் தென்னிந்திய உணவு வகைகளுடன் கூடிய இரவு விருந்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2022 நவம்பர் 01





