யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் வருடாந்த கதின விழா 2022

யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் வருடாந்த கதின விழா 2022

 

 மியன்மாரின் பா தெய்ன் மடாலயத்தின் வருடாந்த கதின விழா 2022 அக்டோபர் 22, சனிக்கிழமை, யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனுராதபுரம் அவுகன ரஜமஹாவிஹாரவின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய சஸ்ரவெள்ளியே தம்மகித்தி தேரர் உட்பட இலங்கை பௌத்த பிக்குகள் மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கை சமூகத்தினர் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை சமூகத்தை வரவேற்ற மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார, இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையில் தற்போதுள்ள நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் தனது திட்டங்களை நிலைநிறுத்துவதற்காக தூதரகத்திற்கு அவர்கள் நல்கும் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

முழு இரவும் இடம்பெற்ற பிரித் ஓதுதல் மற்றும் அன்னதான நிகழ்வைத் தொடர்ந்து, பௌத்தக் கொடிகள், மலர் அலங்காரங்கள் மற்றும் மியன்மார் பாரம்பரிய நடனக் குழுக்களுடன் கூடிய வண்ணமயமான மத ஊர்வலமாக, கதின அங்கி மற்றும் பாரம்பரிய 'கப் ருக' ஆகியன தூதரக வளாகத்தில் இருந்து பா தெய்ன் மடாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

யாங்கூன்

2022 அக்டோபர் 26

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close