சீனாவின் குவாங்சோவின் சகோதரி / நட்பு நகரங்களின் புகைப்படக் கண்காட்சியில் அம்பாந்தோட்டை  பங்கேற்பு

 சீனாவின் குவாங்சோவின் சகோதரி / நட்பு நகரங்களின் புகைப்படக் கண்காட்சியில் அம்பாந்தோட்டை  பங்கேற்பு

  

மாநகரசபையின் சகோதரி / நட்பு நகர உறவுகளின் மைல்கல் ஆண்டுகளைக் கொண்டாடி, குவாங்சோவில் உள்ள  மக்களுக்கு இந்த நகரங்களை இன்னும் நெருக்கமாக இணைக்கும் வகையில் குவாங்சோ மாநகர மக்கள் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படக் கண்காட்சியில் உலகின் பல நகரங்களுடன் அம்பாந்தோட்டையும் இணைந்து கொண்டது.

அம்பாந்தோட்டை மற்றும் குவாங்சோவுக்கு இடையிலான சகோதர நகர உறவின் 15வது ஆண்டு நிறைவை இந்த  ஆண்டு குறித்து நிற்பதுடன், சீனாவின் பொருளாதார அதிகார மையமான குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவ், இரு நாடுகளினதும் பிராந்திய மட்டத்திலான அதிகரித்த பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளுக்கு வழிவகுத்தது.

'பசுமை அபிவிருத்தி மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள்' என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்தக்  கண்காட்சி குவாங்சூ நூலகத்தில் 20 அக்டோபர் முதல் 10 நவம்பர் 2022 வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியின் இணையவழிப் பதிப்பை அதே காலகட்டத்தில் https://s.eqxiu.cn/s/YEkuRC4v?bt=yxy வழியாக அணுகிக் கொள்ளலாம்.

இந்தப் புகைப்படக் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நகரத்தின் பங்கேற்பை, அம்பாந்தோட்டை பிரதேச  செயலகத்தின் உதவியுடன் குவாங்சூவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஒருங்கிணைத்தது.

இலங்கையின் துணைத் தூதரகம்

குவாங்சூ

2022 அக்டோபர் 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close