உயர்ஸ்தானிகர்களின் காட்சியகம் புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் திறந்து வைப்பு

 உயர்ஸ்தானிகர்களின் காட்சியகம் புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் திறந்து வைப்பு

புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவிற்கான இலங்கையின் அனைத்து உயர்ஸ்தானிகர்களுக்குமென அர்ப்பணிக்கப்பட்ட 'உயர்ஸ்தானிகர்களின் காட்சியகத்தை' இன்று (15) அதன் சான்சரிக் கட்டிடத்தில் திறந்து வைத்தது.

உயர்ஸ்தானிகர்களின் காட்சியகத்தில் சேர் டி.பி. ஜயதிலக்க முதல் 1942 இலிருந்து நியமிக்கப்பட்ட இந்தியாவிற்கான இலங்கையின் அனைத்து பிரதிநிதிகள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த சான்சரிக் கட்டிடத்தில் உள்ள ஒரு நடைபாதை இந்தக் காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

உயர்ஸ்தானிகராலயத்தின் உள்ளூர் ஊழியர்களில் நீண்ட காலம் பணியாற்றிய மூன்று உறுப்பினர்களான தீபக் நதானி, ரேணு சர்மா மற்றும் பிரதீப் தாஸ் ஆகியோரால், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அவர்களின் முன்னிலையில், எளிமையான வைபவமொன்றில் வைத்து இந்தக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த இடம் வரவேற்பறையாகவும் சந்திப்பு அறையாகவும் பயன்படுத்தப்படும்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புதுடெல்லி

2022 செப்டம்பர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close