உலகளாவிய சுற்றுலாத்துறைக்கு புத்துயிரளிக்க தூதுவர்  கலாநிதி பாலித கொஹொன  அழைப்பு

உலகளாவிய சுற்றுலாத்துறைக்கு புத்துயிரளிக்க தூதுவர்  கலாநிதி பாலித கொஹொன  அழைப்பு

ஆசிய மலை சுற்றுலாக் கூட்டமைப்பு அதன் ஆறாவது உச்சி மாநாட்டை 2022 ஆகஸ்ட்  17-18 அன்று சீனாவின் குய்சோவில் உள்ள குயாங்கில் நடாத்தியது. இந்த உச்சிமாநாட்டில் மாகாணத்தில் இருந்து குறிப்பாக கைவினைப் பொருட்கள் பலவற்றை காட்சிப்படுத்தப்பட்டதுடன், மத்திய, மாகாண மற்றும் நகர அரசாங்கங்களின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர மற்றும் வணிகப் பிரதிநிதிகளின் பிரசன்னங்களால் அலங்கரிக்கப்பட்டது.

சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன தனது விளக்கக்காட்சியில்,  இலங்கையில் பனி மூடிய சிகரங்கள் இல்லாத அதேவேளை, உலகின் மூன்று முக்கிய மதங்களான பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு புனிதமான உலகின் ஒரே உயரமான சிகரமான ஆதாமின் சிகரம் என அறியப்படும் ஸ்ரீபாத இலங்கையில அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆயிரக்கணக்கானோர் தமது மத ஆர்வத்தை வெளிப்படுத்தவும், சுதந்திரம் மற்றும் அமைதியின் ஒப்பற்ற உணர்வை அனுபவிக்கவும் இந்த மலையில் ஏறினர்.

தூதுவர் கலாநிதி கொஹொன, இலங்கையின் தேயிலை தேசத்தின் அழகிய பசுமை, புதிய  தேயிலையின் நறுமணம், மலைத்தொடர்களை சூழ்ந்து கொண்டிருக்கும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் குறித்து பேசினார். பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது பூட்டிக் ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ள பங்களாக்கள் நிரம்பத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிரேக்கர்கள் இலங்கைத் தீவை 'செரண்டிப்' என்று அழைத்தனர். இந்த வார்த்தை ஒவ்வொரு  மூலையிலும் ஒரு இன்ப அதிர்ச்சி என்ற அர்த்தமுடைய செரெண்டிபிட்டி என்ற ஆங்கில வார்த்தைக்கு வழிவகுத்தது. சீன மொழியில் இது யுவான் ஃபெங் எனப்படும். கலாநிதி கொஹொனா இலங்கையில் ஒரு 'யுவான் ஃபெங்' அனுபவத்திற்காக பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2022 ஆகஸ்ட் 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close