அவசரகால மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களைஇலங்கை அரசாங்கத்திற்கு துருக்கி  நன்கொடை

அவசரகால மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களைஇலங்கை அரசாங்கத்திற்கு துருக்கி  நன்கொடை

துருக்கிய அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. ஃபில்காஸ்ட்ரின் ஊசி அடங்கிய முதல் தொகுதி சரக்கு விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு 2022 ஆகஸ்ட் 14ஆந் திகதி  இலங்கையின் சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு மற்றும்  துருக்கி - இலங்கை நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவர் அஹ்மத் ஹம்டி காம்லி அவர்களுடனான சந்திப்பின் போது, தாராளமான நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வழங்கப்பட்ட ஒற்றுமைக்காக, துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகன் மற்றும் துருக்கிய அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

ஏனைய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் 2022  ஆகஸ்ட் 17 ஆந் திகதி துருக்கியின் இஸ்மித் கடல் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 2022 நடுப்பகுதியில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் நிலைமை குறித்து விளக்குவதற்காக 2022 மே மாதம் நடைபெற்ற துருக்கி-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் அஹ்மத் ஹம்டி காம்லி மற்றும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது தூதுவர் ஹாசன் விடுத்த வேண்டுகோளை அடுத்து, இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவுவது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, துருக்கியின் வெளியுறவு  அமைச்சுடன் ஒருங்கிணைத்து, துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனின் ஒப்புதலுடன் மருத்துவச் சரக்குகளை அனுப்புவதை துருக்கியின் சுகாதார அமைச்சு துரிதப்படுத்தியது.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 ஆகஸ்ட் 22

 ......................................

මාධ්‍ය නිවේදනය

 තුර්කිය ශ්‍රී ලංකා රජය වෙත අත්‍යවශ්‍ය ඖෂධ සහ වෛද්‍ය සැපයුම් තොගයක් පරිත්‍යාග කරයි

ශ්‍රී ලංකාවේ රෝහල්වලට කඩිනමින් අවශ්‍ය කෙරෙන ඩොලර් මිලියනයක වටිනාකමින් යුත් අත්‍යවශ්‍ය ඖෂධ සහ අනෙකුත් වෛද්‍ය සැපයුම් තොගයක් තුර්කි රජය විසින් ශ්‍රී ලංකාව වෙත පරිත්‍යාග කරන ලදී. ෆිල්ගාස්ට්‍රින් එන්නත් ඇතුළත් පළමු ඖෂධ තොගය ගුවන් මගින් ශ්‍රී ලංකාවට ගෙන එන ලද අතර, එය 2022 අගෝස්තු 14 වැනි දින මෙරට සෞඛ්‍ය අමාත්‍යංශයේ නිලධාරීන් විසින් භාර ගන්නා ලදී.

තුර්කියේ ශ්‍රී ලංකා තානාපති එම්. රිස්වි හසන් මැතිතුමා 2022 අගෝස්තු 17 වැනි දින තුර්කි විදේශ කටයුතු අමාත්‍ය මෙව්ලුට් කවුෂෝලු මැතිතුමා සහ තුර්කි- ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තු මිත්‍රත්ව කණ්ඩායමේ සභාපති අහ්මට් හම්ඩි කැම්ලි මහතා හමුවූ අවස්ථාවේ දී, තුර්කි රජය ශ්‍රී ලංකා රජය සහ ජනතාව වෙත පළ කළ ත්‍යාගශීලී පරිත්‍යාගය සහ සහයෝගීතාව වෙනුවෙන් තුර්කි ජනරජයේ ජනාධිපති රිසෙප් ටායිප් එර්ඩොගන් මැතිතුමා වෙත සිය ස්තුතිය පුද කළේ ය.

අනෙකුත් ඖෂධ සහ වෛද්‍ය සැපයුම් සහිත බහාලුම් ද්විත්ත්වය 2022 අගෝස්තු 17 වැනි දින තුර්කියේ ඉස්මිත් සාගර වරායෙන් පිටත් වූ අතර, එය 2022 සැප්තැම්බර් මස මැද භාගයේ දී කොළඹ වරායට ළඟා වීමට නියමිත ය.

ශ්‍රී ලංකාවේ තත්ත්වය පිළිබඳව දැනුම්වත් කිරීම සඳහා 2022 මැයි මාසයේ දී තුර්කි - ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තු මිත්‍රත්ව කණ්ඩායමේ සභාපති අහ්මට් හම්ඩි කැම්ලි මහතා සහ තුර්කි විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් සමඟ පැවති සාකච්ඡාවේ දී තානාපති හසන් මැතිතුමා යොමු කළ ඉල්ලීමකට අනුව, ශ්‍රී ලංකාවේ සෞඛ්‍ය ක්ෂේත්‍රයට සහය වීම පිළිබඳව සලකා බලන ලදී. ඉන් අනතුරුව, තුර්කි සෞඛ්‍ය අමාත්‍යාංශය සමඟ සම්බන්ධීකරණය වී කටයුතු කළ තුර්කි විදේශ කටයුතු අමාත්‍යාංශය, තුර්කි ජනරජයේ ජනාධිපති රිසෙප් ටායිප් එර්ඩොගන් මැතිතුමාගේ ද අනුමැතිය සහිතව මෙම වෛද්‍ය සැපයුම් තොගය මෙරටට එවීමේ කටයුතු කඩිනම් කළේ ය.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

අන්කාරා

2022 අගෝස්තු 22 වැනි දින

.............................................

ஊடக வெளியீடு

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close