இலங்கைக்கு பணம் அனுப்பும் வரவுகளை அதிகரிப்பதற்காக, ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி ஸூம் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்கள் வங்கியுடன் ஊடாடும் அமர்வை ஏற்பாடு செய்தது.
மக்கள் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் அருணி லியனகுணவர்தன, வதிவிடமற்ற வெளிநாட்டு நாணயக் கணக்கைத் திறப்பதற்கான நடைமுறையை விளக்கி, மக்கள் வங்கியினூடாக இலங்கைக்கு எவ்வாறு நிதியை அனுப்புவது என்பதை விளக்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அல்லாத வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் திறப்பதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் வரவுகளை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர் ஷானிகா திஸாநாயக்க, வதிவிடமற்ற வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் திறக்குமாறு புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவித்தார். கணக்குகளைத் திறப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.
வதிவிடமற்ற வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் திறப்பதற்கும், சட்டப்பூர்வ வழிகள் மூலம் நிதிகளை அனுப்புவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்காக, தூதரகம் இலங்கையின் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஆடைத் தொழிற்சாலைகளையும் அணுகி வருகின்றது.
தூதரகத்திற்கான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஹர்ஷன லியனகே மற்றும் தனிப்பட்ட உதவியாளர் மதுக விதானவாசன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்,
அம்மான்
2022 ஆகஸ்ட் 16