இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தயார்நிலை

 இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தயார்நிலை

வணிக அறைகளுக்கு இடையே மேம்பட்ட உரையாடலுடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கையில் உள்ள தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் டாக்கா வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பங்குபற்றுதலுடன் டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 27ஆந் திகதி வெபினாரொன்றை ஏற்பாடு செய்தது.

வெபினாரில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன, இவ்வாறான காலத்திற்கேற்ற முன்முயற்சியானது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக அளவை அதிகரிப்பதற்கும் முதலீடு, சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் வழி வகுக்கும் என சுட்டிக்காட்டினார். இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமைகளை எவ்வாறு சிறந்த நன்மைகளுக்காக பெருநிறுவனத் துறை சாதகமாக மாற்ற முடியும் என்பதை உயர்ஸ்தானிகர் மேலும் விளக்கினார்.

கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கிய தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஷிஹாம் மரிக்கார் மற்றும் டாக்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் அஃப்சருல் ஆரிபீன் ஆகியோர் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் சாத்தியமான வர்த்தக வாய்ப்புக்களை அடையாளம் காணும் திட்டத்தை வகுத்தனர். ஒரு காலவரிசை மற்றும் பின்தொடர்தல் வெபினாருடன் இணைந்து நடாத்தப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை இரு தரப்பினரும் முன்மொழிந்தனர்.

இக்கலந்துரையாடலில் பிரதி உயர்ஸ்தானிகர் ருவந்தி தெல்பிட்டிய மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (வர்த்தகம்) ஸ்ரீமாலி ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

டாக்கா

2022 ஜூலை 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close