கிண்டியன், செஜியாங்கில் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாய பாரம்பரிய அமைப்புக்கள் குறித்த மாநாடு

கிண்டியன், செஜியாங்கில் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாய பாரம்பரிய அமைப்புக்கள் குறித்த மாநாடு

2022 ஜூலை 18 ஆந் திகதி சீனாவின் சிஜியாங்கில் உள்ள கிண்டியனில் உலகளவில் முக்கியமான விவசாய பாரம்பரிய அமைப்புக்களுக்கான மாநாடு நடைபெற்றது. கலப்பின முறையில் நடைபெற்ற இந்த மாநாடு, அமைச்சர்கள் உட்பட உயர்மட்ட பேச்சாளர்களை ஈர்த்தது. தூதுவர் கலாநிதி பாலித கொஹொன அவர்கள் கூட்டத்தில் உரையாற்றியதுடன், விவசாய பாரம்பரிய அமைப்பில் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் உலர் வலயத்தின் (கணிசமான அளவில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது) அடுக்கடுக்கான தொட்டி நீர்ப்பாசன முறைமையில் முக்கியமாக கவனம் செலுத்தினார். உலகளவில் பட்டியலிடப்பட்ட 65 உணவு மற்றும் விவசாய அமைப்புக்களில், 18 சீனாவில் உள்ளன.

பங்கேற்பாளர்கள் பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு நூல் நூற்பு மற்றும் ஹூசோவில் இணைக்கப்பட்ட மீன் குளம் அமைப்பு மற்றும் நெல் சாகுபடி மற்றும் லாங் சியாங் கிராமத்தில் நெருக்கமாக தொடர்புடைய கெண்டை வளர்ப்பு முறை ஆகியவற்றின் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உட்கொள்ளக்கூடிய நான்கு வகையான கெண்டை மீன்களை கிராம மக்கள் வளர்த்து வந்தனர். ஒருங்கிணைந்த வேளாண்மை முறை இரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைக்க உதவுகின்றது.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2022 ஜூலை 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close