டிரிபிள் 5000 இரத்தப் பைகள் மற்றும் ஃபில்கிராஸ்டிம் 750 போத்தல்களை தாய்லாந்தின் தலசீமியா அறக்கட்டளை மற்றும் சியாம் பயோசயின்ஸ் குழுமம் இலங்கைக்கு நன்கொடை

டிரிபிள் 5000 இரத்தப் பைகள் மற்றும் ஃபில்கிராஸ்டிம் 750 போத்தல்களை தாய்லாந்தின் தலசீமியா அறக்கட்டளை மற்றும் சியாம் பயோசயின்ஸ் குழுமம் இலங்கைக்கு நன்கொடை

குழந்தை மருத்துவப் பேராசிரியர் மற்றும் தலசீமியா அறக்கட்டளைக் குழுவின் தலசீமியா ஆராய்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் ஏடி ஜீன்ஸ் கோ. லிமிடெட்டின் தலைவர் பேராசிரியர் விப் விபிரகாசித், 1,173,790  மில்லியன் தாய் பட் பெறுமதியான டிரிபிள் 5000 இரத்தப் பைகள் மற்றும் ஃபில்கிராஸ்டிம் 750 போத்தல்களை தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்னவிடம் 2022 ஜூலை 06ஆந் திகதி பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனையில் வைத்து கையளித்தார்.

இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்ட இரத்தப் பைகளை வெற்றிகரமாக வழங்குவதற்கு கடினமாக உழைத்த பேராசிரியர் விப் விப்ரகாசித் மற்றும் அவரது குழுவினருக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக தூதுவர் சமிந்த கொலொன்ன தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார். தாய்லாந்தின் தலசீமியா அறக்கட்டளை இலங்கை உட்பட எல்லைகள் இன்றி மனித குலத்திற்கு ஆற்றிவரும் சேவைகளை இலங்கை அரசாங்கம் எப்போதும் மிகுந்த பாராட்டுக்களுடன் அங்கீகரிப்பதாக தூதுவர் தெரிவித்தார். தாய்லாந்தின் தலசீமியா அறக்கட்டளையிலான ஆதரவு மற்றும் பெருந்தன்மைக்காக, அதி மாண்புமி இளவரசி சோம்சவலிக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கை மக்களுக்கான மேலதிக மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியதற்காக 'சியாம் உயிரியல் குழுவிற்கு' தூதுவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

பேராசிரியர் விப் விப்ரகாசித் தேரவாத பௌத்த விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால சிறந்த உறவுகளை நினைவு கூர்ந்தார். தாய்லாந்து தலசீமியா அறக்கட்டளை இலங்கை தலசீமியா நிலையத்துடனும் அதன் பணிப்பாளர் பேராசிரியர் அனுஜா பிரேமவர்தனவுடனும் கொண்ட நெருக்கமான உறவுகளை எடுத்துரைத்த பேராசிரியர் விப் விப்ரகாசித், 'தேவையுள்ள நண்பன் உண்மையில் ஒரு நண்பன்' என்ற பழமொழியை எடுத்துக்காட்டி, இலங்கை மக்களுக்கு தாய்லாந்து மக்கள் வழங்கிய அன்பளிப்பாக இந்த நன்கொடையை அடையாளம் காட்டினார். தாய்லாந்தின் தலசீமியா அறக்கட்டளை ஹீமாட்டலொஜிஸ்ட்கள், செவிலியர்கள், மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், பெற்றோர்கள் மற்றும் தலசீமியா நோயாளிகளின் குழுவால் 1989 ஜூலை 24ஆந் திகதி நிறுவப்பட்டது.

இலங்கையில் மருந்துத் துறையில் முதலீடு செய்வதற்கு தூதுவரால் விடுக்கப்பட்ட அழைப்பை சியாம் பயோசயின்ஸ் குழுமத்தின் அபெக்ஸ்செலா கோ. லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் தவட்சை பிசேட்குல் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.

தாய்லாந்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக அதி மாண்புமிகு மறைந்த மன்னர் ராமா ஐஓ அவர்களால் தொடங்கப்பட்டதைப் பாதுகாத்து, தொடரும் நோக்கில் தாய்லாந்தின் முதலாவது மற்றும் ஒரே உயிரி மருந்து உற்பத்தியாளரான சியாம் பயோசயின்ஸ் கோ. லிமிடெட் 2009 இல் நிறுவப்பட்டது.

தலசீமியா அறக்கட்டளையின் துணைத் தலைவர் சைபின் ஃபஹோலியோதின், கசெட்சார்ட் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் ஏடி ஜீன்ஸ் கோ. லிமிடெட்டின் துணைத் தலைவர் அரீ தயனனுபட், ஏடி ஜீன்ஸ் கோ. லிமிடெட்டின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி பசரே தன்பைச்சித்ர் மற்றும் அபெக்ஸ்செலா கோ. லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் தவட்சை பிசெட்குல் ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 ஜூலை 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close