இலங்கையின் பிரபல வர்த்தக நாமமான 'ஹேமாஸ்' ஓமானி சந்தைக்குள் நுழைவு

இலங்கையின் பிரபல வர்த்தக நாமமான ‘ஹேமாஸ்’ ஓமானி சந்தைக்குள் நுழைவு

இலங்கையின் 72 வயதான முன்னணி பொது மேற்கோள் நிறுவனமான ஹேமாஸ் ஹோல்டிங் பி.எல்.சி. ஓமான் சந்தையில் நுழைய உள்ளது.

ஓமான் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவரான ரேதா ஜுமா அல் சலேஹ்வைச் சந்தித்த ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புக்கான ஹேமாஸ் சிரேஷ்ட முகாமையாளர் கவீந்திர கசுன் சிகேரா, ஹேமாஸ் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தி வைத்தனர். ஹேமாஸ் தயாரிப்புக்களை ஓமான் சந்தையில் வழங்குவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் மற்றும் சுல்தானேற்றில் ஹேமாஸ் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கான எதிர்கால நோக்கம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

வணிக இணைப்புகளை நிறுவுவதற்காக, ஹேமாஸின் சர்வதேச வணிகத்திற்கான சிரேஷ்ட முகாமையாளர் மற்றும் மஸ்கட் பார்மசி (எஃப்.எம்.சி.ஜி. பிரிவு), கான்கார்டியா குழுமம், ஃபியூச்சர் வெல் டிரேடிங், லுலு ஹைப்பர் மார்க்கெட், ஸ்பார் பல்பொருள் அங்காடிகள் உட்பட ஓமானில் உள்ள அவர்களது சாத்தியமான சகாக்களுக்கு இடையேயான தொடர் வணிக சந்திப்புக்களுக்கு மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் வழிவகுத்தது.

ஓமான் சுல்தானேற்றுகாகான ஹேமாஸ் வாடிக்கையாளர் பொருட்கள் விஜயம் எம்.எஸ். ஹோல்டிங் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தக ஆலோசகர் தினேஷ்குமார் கார்த்திகேசுவால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2022 ஜூலை 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close