நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறைகளின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மீளாய்வு

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறைகளின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மீளாய்வு

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறைகளின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக 2022 ஜூலை 04ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பிற்கு, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இணைத் தலைமை தாங்கினார்.

இந்த சந்திப்பின் போது, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி சபை தொடர்பான பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வழிமுறைகளின் கீழ் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், இந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்ப்பதற்குமான வழிகள் ஆராயப்பட்டன.

இந்த சவாலான காலங்களிலான அவர்களது பணிகளைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான வழக்கமான கூட்டங்கள் நடாத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை பொலிஸ், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி சபை ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூலை 07

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close