இலங்கைத் தூதரகம் இரத்தினதீப சர்வதேச புலம்பெயர்ந்தோர் சபையுடன் இணைந்து பொது இராஜதந்திர சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக மே தினத்திற்கான திறமை நிகழ்ச்சி மற்றும் பஸார் ஆகியவற்றை ஏற்பாடு செய்தது.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமன்றி, லெபனானியர்கள் உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
புலம்பெயர் சமூகத்தினரின் நடனம் மற்றும் பாடலுடன் நிகழ்வானது வண்ணமயமாக இருந்ததுடன், 3 பிரதான பரிசுகள் மற்றும் 60 ஆறுதல் பரிசுகளுடன் ரொஃபிள் குலுக்கலும் நடைபெற்றது. முதல் பரிசாக கத்தார் எயார்வேஸின் விமான டிக்கெட் வழங்கப்பட்டது.
லெபனான் மற்றும் சிரியாவுக்கான தூதுவர் ஷானி கல்யானரத்ன கருணாரத்ன இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், இரத்தினதீப சர்வதேச குடியேற்ற சபையின் சார்பில் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர்களாக திருமதி. குசும் கொடிக்கார மற்றும் திரு. நுவான் கொடிகார ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்,
பெய்ரூட்
2022 மே 09