இலங்கை தேயிலை சபை மற்றும் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனுசரணையின் கீழ், 2022 ஏப்ரல் 12 முதல் 14 வரை சாவ் பாலோவில் நடைபெற்ற அனுபுட் பிரேசில் 2022 கண்காட்சியில் இம்பீரியல் டீ (பிரைவேட்) லிமிடெட், மோல்ட்ராஸ் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட், பசிலுர் டீஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் டீ டோக் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நான்கு இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
பிரேசிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உணவு மற்றும் குளிர்பானக் கண்காட்சிகளில் அனுபுட் பிரேசில் கண்காட்சியும் ஒன்றாகும். அனுபுட் 2022 இல் பங்குபற்றிய 19 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதுடன், இதில் 900க்கும் மேற்பட்ட பிரேசிலிய மற்றும் சர்வதேசத் தர நாமங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
உணவு மற்றும் குளிர்பானத் தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், பல்பொருள் அங்காடிகள், வசதியான கடைகள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
இலங்கை நிறுவனங்களுக்கு திருப்திகரமான பொருள் கோரல் கட்டளைகள் மற்றும் வணிக சந்திப்பு வாய்ப்புக்கள் கிடைத்தன. அமைச்சர் ஆலோசகர் (வர்த்தகம்) திருமதி. சீவலி விஜேவந்த அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைத் தூதரகத்தால் இலங்கையின் பங்கேற்பு எளிதாக்கப்பட்டது.
பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம்,
2022 ஏப்ரல் 20