வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திற்கு புதிய கௌரவ தூதுவர் நியமனம்

 வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திற்கு புதிய கௌரவ தூதுவர் நியமனம்

வியட்நாமின் ஹோ சி மின் நகரிற்கான இலங்கையின் கௌரவ தூதுவராக ஷெர்லி மார்குரைட் ஹொப்மன் அலுவிஹாரே இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். வியட்நாம் சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சின் தூதரக விவகாரங்கள் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து 2022 மார்ச் 23 ஆந் திகதி ஹா நோயில் அவர் தனது பதவியைப் பெற்றுக் கொண்டார்.

ஹொப்மன் அலுவிஹாரே கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெற்ற அவர், வோக்கர்ஸ் டுவர்ஸ், டெல்மேஜ் குரூப் போன்றவற்றில் பணிபுரிந்து, சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார். அவர் 2008ஆம் ஆண்டு முதல் ஹோ சி மின் நகரில் வசித்து வருவதுடன், தாய்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் கூட்டாளர் அலுவலகங்களுடன் கூடிய உலகளாவிய வலையமைப்பு மற்றும் ஆதார நிறுவனமான வியட்நாம் நெட்குளோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளராக அவர் தற்போது பணிபுரிந்து வருகிறார். நெட்குளோ நிறுவனமானது, வியட்நாம் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் உறுப்பினராகவும் உள்ளது.

ஹோ சி மின் நகரம் வியட்நாமின் வர்த்தக தலைநகரமாகும். எனவே வர்த்தகம், சுற்றுலா, முதலீடு, மக்களிடையேயான தொடர்புகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக இலங்கைப் பிரதிநிதி ஒருவர் இந்நகரில் இருப்பது இன்றியமையாதது. இந்த சரியான நேரத்தில் நியமனம் மக்களுக்கு ஊக்கமளிக்கும். இலங்கை மற்றும் ஹோ சி மின் நகரில் உள்ள இலங்கை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்படும் விளம்பர நடவடிக்கைகளுக்காக புதிய கௌரவத் தூதுவரின் மூலம் அடிப்படைத் தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இரண்டாவது செயலாளர் (வர்த்தகம்) பிரசாதி பூமாவலகே மற்றும் ஹா நோயில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இணைப்பாளர் கிரிஷாந்தி ராமநாயக்க ஆகியோர் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விழாவில் கலந்துகொண்டனர். வியட்நாமின் வெளிநாட்டு அமைச்சின் நிபுணர், நுயென் தான் ஹூவாங் நிகழ்வின் போது துங்கிற்கு உதவினார்.

இலங்கைத் தூதரகம்,

வியட்நாம்

2022 மார்ச் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close