மெல்பேர்னில் உள்ள புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டா முப்பத்திரண்டு இலங்கை மென்பொருள் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு

 மெல்பேர்னில் உள்ள புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டா முப்பத்திரண்டு இலங்கை மென்பொருள் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு

அவுஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்காக புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டாவினால் வேலை அனுமதிப்பத்திரத்தில் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 32 அதி திறமையான மென்பொருள் பொறியியலாளர்கள் அண்மையில் மெல்பேர்னில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்தனர். மெல்போர்னைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ க்ரீன் டேட்டா, 2018 இல் வணிகத்தைத் தொடங்கியதுடன், வங்கி மற்றும் நிதிச் சேவைக் களத்தில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் கிளவுட், டேட்டா மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை மையமாகக் கொண்ட நிறுவனமாகும்.

குறுகிய காலத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட முப்பத்திரண்டு மென்பொருள் பொறியியலாளர்கள் குழுவானது ஐ க்ரீன் டேட்டா இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்புக்களின் முதல் தொகுப்பாவதுடன், இது திறமையான வளங்களுக்கான ஆதார சந்தையை பன்முகப்படுத்துகின்றது. மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இணை நிறுவனரும் இணை முகாமைத்துவப் பணிப்பாளருமான ஃபிராங்க் ராஜகுலேந்திரன் இந்தக் கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் இதுவாகும். இராஜகுலேந்திரன், இலங்கையின் திறமைகளை ஊக்குவிப்பதற்காகவும், ஆட்சேர்ப்புக்கு வழிவகுத்த பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்குவதற்காகவும் துணைத் தூதுவர் கபில பொன்சேகாவின் முயற்சிகளைப் பாராட்டினார்.

ஐ க்ரீன் டேட்டாவின் இணை நிறுவனரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான மெக்ஸ் சுந்தரம் குறிப்பிடுகையில், இருநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், ஐ க்ரீன் டேட்டா 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் டிலொயிட் டெக்னொலஜி ஃபாஸ்ட் 50 அவுஸ்திரேலியா விருதுகளிலும், 2021 இல் சி.ஆர்.என். ஃபாஸ்ட் 50 அவுஸ்திரேலியா விருதுகளிலும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக, எதிர்வரும் காலங்களில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்களை ஆராயும் எண்ணம் உள்ளது.

இலங்கையின் மென்பொருள் பொறியியலாளர்களை துணைத் தூதரகத்திற்கு வரவேற்ற துணைத் தூதுவர், ஒரே தொகுதியில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இலங்கையர்களுக்கு அனுசரணை வழங்கியதற்காக ஐ க்ரீன் டேட்டா நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார். திறமையான துறையினருக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ள நிலையில், இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சியாகும் என அவர் குறிப்பிட்டார்.

துணைத் தூதுவர் டயானா பெரேரா, ஐ க்ரீன் டேட்டாவின் இணை நிறுவனரும் வாடிக்கையாளர் வெற்றியின் தலைவருமான பிரவீன் புருஷோத்தமன் மற்றும் திறமை கையகப்படுத்தல் தலைவர் சிவவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையின் துணைத் தூதரகம்,

மெல்போர்ன்

2022 மார்ச் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close