வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் நியமன முன்பதிவு முறைமைக்கான 1919 தொலைபேசி அழைப்பு நிலைய சேவைகள் அறிமுகம்

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் நியமன முன்பதிவு முறைமைக்கான 1919 தொலைபேசி அழைப்பு நிலைய சேவைகள் அறிமுகம்

கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் நடைமுறைகளை நெறிப்படுத்தி, நாளாந்தம் பிரிவுக்கு வருகை தரும் பொது மக்களுக்கு உதவும் நோக்கத்துடன், மின்னணு ஆவண சான்றளிப்பு முறைமை (eDAS) மூலம் சான்றிதழ்கள் / ஆவணங்களை சான்றளித்துக்கொள்ள விரும்பும் பொது மக்களுக்காக, நடைமுறையில் உள்ள நேரடியாக வருகை தரும் நடைமுறைக்கும் மேலதிகமாக, அரசாங்க தகவல் நிலையத்துடன் (1919 அழைப்பு நிலையம்) இணைந்து நியமன முன்பதிவு முறைமையொன்றை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவிலிருந்து ஆவண அங்கீகாரச் சேவைகளைப் பெறுவதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இணையவழி சந்திப்பு முறையின் மூலம் முன்பதிவு செய்வதற்கான அணுகல் இல்லாத பொதுமக்களுக்கு இந்த நியமன முன்பதிவு முறைமை முக்கியத்துவம் அளிக்கும்.

இந்த புதிய முறைமையின் கீழான சேவைகள் 2022 ஜனவரி 27ஆந் திகதி, வியாழக்கிழமை  முதல் கிடைக்கும். நேரத்தை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் எந்த தொலைபேசி வலையமைப்பிலிருந்தும் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம், குறித்த அழைப்பிற்கு பதிலளிக்கும் முகவர் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதனூடாக நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

வருகை தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் இணையவழி சந்திப்பு முறைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் தற்போதும் காணப்படுகின்றமையினால், க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சை சான்றிதழ்களை சான்றளித்துக்கொள்வதனைத் தவிர்த்து, கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகலில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு

2022 ஜனவரி 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close