இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் உக்ரேனிய வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் வர்த்தக வலையமைப்பு மற்றும் இணைப்பு அமர்வை பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய 2022 ஜனவரி 20ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வு, கடந்த ஆண்டு உக்ரைனுக்கு இராஜாங்க அமைச்சர் மேற்கொண்ட விஜயத்தின் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகும்.
இச் சந்திப்பில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, சுற்றுலா, விவசாய உற்பத்திகள், தகவல் தொழில்நுட்பத் துறை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான முதலீடுகள் போன்றவற்றில் இரு நாடுகளிலும் உள்ள ஒத்துழைப்பின் அதிக வாய்ப்புக்கள் மற்றும் வழிகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அண்டை நாடுகளுடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்ட சுதந்திரமான மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான வர்த்தக உடன்படிக்கைகளின் காரணமாக, உக்ரேனிய நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் கிடைக்கும் அபரிமிதமான சந்தை வாய்ப்புக்களை அடைய முடியும் என இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
உக்ரேனிய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் திரு. ஜெனடி சிஜிகோவ் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு. விஷ் கோவிந்தசாமி ஆகியோரும் இந்த அமர்வில் உரையாற்றியதுடன், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகியவற்றின் அடிப்படையில் பயன்படுத்தப்படாத திறனைப் பயன்படுத்துவதற்கு உறுப்பினர்களிடையே வழக்கமான தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
விவசாய உற்பத்திகள், சுற்றுலா, விருந்தோம்பல் துறை மற்றும் தொழில்துறை தயாரிப்புத் துறை ஆகிய மூன்று முக்கிய பகுதிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட 100 இலங்கை மற்றும் உக்ரேனிய நிறுவனங்கள் இந்த வர்த்தக இணைப்பு அமர்வில் பங்கேற்றன.
உக்ரைனுக்கு சான்றளிக்கப்பட்ட துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், இலங்கைக்கான உக்ரைன் தூதுவர் இகோர் பொலிகா மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சாவித்திரி பானபொக்கே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்.
அங்காரா
2022 ஜனவரி 27