கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் உரை

கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் உரை

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் 'இலங்கை, பொதுநலவாய மற்றும் உலகளாவிய பிரித்தானியா' என்ற தொனிப்பொருளில் 2022 ஜனவரி 12ஆந் திகதி கார்ல்டன் கிளப்பில் வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று உறவுகளாலும், பொதுநலவாயத்தில் இலங்கையின் உறுப்புரிமையின் பின்னணியில் அவற்றின் விரிவாக்கத்தாலும் பிணைக்கப்பட்டுள்ள இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பரந்த அளவிலான உறவுகளை வலியுறுத்தினார். பொதுநலவாயமானது, ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் உலகளாவிய பிரித்தானியக் கட்டமைப்பின் இயற்கையான ஏவுதளமாகும் என்றும், ஆசியாவில் இருந்து உலகளாவிய பிரித்தானியாவிற்கு இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க பங்காளியாக இருக்க முடியும் என்றும் அவர் விளக்கினார்.

பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையின் தலைவரான ஹோல்பீச் பிரபு டெய்லர், உலகளாவிய பிரித்தானியாவின் கட்டமைப்பிற்கு பங்களிக்கும் இலங்கையின் திறனை அங்கீகரித்தார். கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையின் புரவலரான மேஃபெயார் பிரபு ரேஞ்சர் அவர்களால் இறுதிக் கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன், அவர் ஐக்கிய இராச்சியத்தின் நண்பராகவும் பொதுநலவாயத்தின் செயல் உறுப்பினராகவும் இலங்கையின் வகிபாகத்தைப் பாராட்டினார்.

ஹோல்பீச் பிரபு டெய்லர் மற்றும் மேஃபெயார் பிரபு ரேஞ்சர் ஆகியோரின் அழைப்பின் பேரில் உயர்ஸ்தானிகர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

லண்டன்

2022 ஜனவரி 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close