ஜோர்தானில் உள்ள இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்காக, ஆட்சேர்ப்பு முகவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு டிசம்பர் 22ஆந் திகதி சான்சரி வளாகத்தில் விளக்கமளிக்கும் நிகழ்ச்சியொன்றை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு ஏற்பாடு செய்தது. வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்னர், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட தொழில்சார் பயிற்சிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட திறன்கள் குறித்து மூன்றாவது செயலாளர் பி.ஏ. ரூபசிங்க விரிவாக விளக்கினார். நாடு முழுவதிலும் உள்ள பிராந்திய நிலையங்களினூடாக தொழில்சார் பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டது.
விரிவான விளக்கக்காட்சியால் கவரப்பட்ட பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்கள், பிராந்திய நிலையங்களுக்குச் செல்வதற்கும், தமது பிரதிநிதி சங்கத்தை சந்திப்பதற்குமாக தாம் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தூதரகத்திடம் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக ஜோர்தானில் விருந்தோம்பல் துறையில் திறமையான பணியாளர்களை பணியமர்த்துவது குறித்தும் ஆராயுமாறு தூதுவர் ஷானிகா திஸாநாயக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் இணைந்து இந்த விஜயத்தை தூதரகம் ஏற்பாடு செய்யும் என தூதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முன்னதாக தொழிலாளர் பிரிவைச் சேர்ந்த திரு. மஞ்சுள பண்டாரவினால் இலங்கையின் பறவைக் காட்சியைக் காண்பிக்கும் காணொளி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.
இலங்கைத் தூதரகம்,
ஜோர்டான்
2021 டிசம்பர் 29