தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரமான இந்தோனேசியாவில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரமான இந்தோனேசியாவில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இந்தோனேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் இணைந்து இந்தோனேசிய பயண முகவர்களுக்கான சுற்றுலா ஊக்குவிப்பு வலையமைப்பை 2021 டிசம்பர் 14ஆந் திகதி ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் மொத்த அபிவிருத்தி உற்பத்தியுடன், இந்தோனேசியா 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மற்றும் 180 மில்லியனுக்கும் அதிகமான நடுத்தர வர்க்கம் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் உலகின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜா குணசேகர தனது ஆரம்ப உரையில், விவேகமான பயணிகளுக்கு இலங்கை வழங்கும் தனித்துவமான அனுபவங்களை சுருக்கமாக எடுத்துரைத்ததுடன், இந்தோனேசியாவின் நட்பு அண்டை நாடான இலங்கையை தீவிரமாக ஊக்குவிப்பதற்காக இந்தோனேசியப் பயண முகவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தோனேசிய சுற்றுலா முகவர்களுக்கான இலங்கை சுற்றுலா குறித்த விழிப்புணர்வை வழங்குவதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் தூதரகத்தின் இந்த முயற்சியை பாராட்டிய இந்தோனேசிய வர்த்தக சபை மற்றும் தொழில்துறை இந்தோனேசியாவின் சுற்றுலா சபையின் பிரதித் தலைவர் கலாநிதி. சதிதி ஹந்தினி, உலகம் முழுவதும் பயணம் செய்யும் இந்தோனேசியர்கள், இலங்கை வழங்கும் இடங்களை அனுபவிப்பதில் உற்சாகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பத்மா சிறிவர்தன, தொற்றுநோய் தொடர்பான இலங்கையின் தற்போதைய நிலைமையை முன்வைத்து, தொற்றுநோய் சூழ்நிலையில் இலங்கைக்கு பயணிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு நம்பிக்கையை வழங்கினார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் துஷான் விக்ரமசூரிய தனது விளக்கக்காட்சியின் போது, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள், வசதிகள் மற்றும் சர்வதேச பங்காளித்துவங்கள் உட்பட இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கக்கூடிய தனித்துவமான அனுபவங்களை விவரித்தார்.

இலங்கை உள்வரும் சுற்றுலா நடத்துநர்களின் சங்கத்தின் சபை உறுப்பினர் பெட்டி போல் மற்றும் சுற்றுலாத்துறையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சங்கத்தின் உறுப்பினர் ரொஹான் அபேவிக்ரம ஆகியோர் இந்தோனேசிய பயண முகவர்களை இந்த சங்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுடன், பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர் திலினி ஜயவர்தன, மூன்றாம் செயலாளர் (வர்த்தகம்) ஹேஷானி பிரேமதிலக, அரசாங்க உறவுகள் அதிகாரி ஜெனிசா லஹோப் மற்றும் பொது இராஜதந்திர நிறைவேற்று அதிகாரி பெப்ரி ஃபலா{ஹதீன் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் கனிஷ்ட முகாமையாளர் திலுக்ஷி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

இலங்கைத் தூதரகம்,

ஜகார்த்தா

2021 டிசம்பர் 24

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close