இலங்கையில் ஆலைகளை நிறுவுவதற்கு ஹிசென்ஸ் மற்றும் ஹையர் பயோமெடிக்கல் ஆகியன ஊக்குவிப்பு

இலங்கையில் ஆலைகளை நிறுவுவதற்கு ஹிசென்ஸ் மற்றும் ஹையர் பயோமெடிக்கல் ஆகியன ஊக்குவிப்பு

சகோதர நகர உறவுகளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தக் கடிதத்தில் கைச்சாத்திடுவதனைக் காண்பதற்காக கலாநிதி. பாலித்த கொஹொன கிங்டாவோவிற்கு விஜயம் செய்த போது, ஹிசென்ஸ் மற்றும் ஹையர் பயோமெடிக்கல் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டார்.

வெள்ளைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியில் உலகளாவிய மாபெரும் நிறுவனமான ஹிசென்ஸ், அதன் தயாரிப்புக்கள் மிகவும் தேவைப்படும் வாடிக்கையாளர் தளத்தின் அதிக எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கான செயற்கை நுண்ணறிவை அதிகளவில் பயன்படுத்துகின்றது. ஹிசென்ஸ் இலங்கையில் 100,000 உபகரணங்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டுத் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், பிராந்திய சந்தையையும் பூர்த்தி செய்யும் வகையில், இலங்கையில் உற்பத்தி வசதியை ஏற்படுத்துவது குறித்து ஹிசென்ஸ் பரிசீலிக்க வேண்டும் என்ற கலாநிதி. கொஹொனவின் ஆலோசனைக்கு உற்சாகமான வரவேற்புக் கிடைத்தது.

தூதுவர் கொஹொன ஹையர் பயோமெடிக்கல் தலைமை அலுவலகத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் விளைவாக, இலங்கையின் தடுப்பூசித் திட்டத்திற்கு ஹையர் பயோமெடிக்கல் ஆற்றிய பங்களிப்பின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிந்தது. யுனிசெப்பின் உதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட விஷேடமான உபகரணமொன்று குறிப்பிட்ட தர அடையாளத்தின் தடுப்பூசியை -80 செல்சியசில் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹையர் பயோமெடிக்கல் ஆனது லங்கா மருத்துவமனை, ஜே.கே.யு. மருத்துவமனை மற்றும் மாகாண மருத்துவமனைகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது. அதன் மிகப்பெரிய சந்தைகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் காணப்பட்டன.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 நவம்பர் 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close