2021 குவாங்சோ உலக விவசாயக் கண்காட்சியில் இலங்கையின் உணவு நிறுவனங்கள் பங்கேற்பு

 2021 குவாங்சோ உலக விவசாயக் கண்காட்சியில் இலங்கையின் உணவு நிறுவனங்கள் பங்கேற்பு

2021 நவம்பர் 8 - 9 வரை நடைபெற்ற 2021 குவாங்சோ உலக விவசாயக் கண்காட்சியில் சீனாவைத் தளமாகக் கொண்ட இலங்கையின் உணவு நிறுவனங்களின் முகவர்களின் பங்கேற்பை குவாங்சோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. 'சிலோன் டீ, பிஸ்கட், சுவையூட்டிகள் மற்றும் கித்துல் பானி உள்ளிட்ட இலங்கைத் தயாரிப்புக்கள் இந்தக் கண்காட்சியில் ஊக்குவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது.

2019ஆம் ஆண்டு குவாங்சோவில் முதன்முறையாக இந்தக் கண்காட்சி நடைபெற்றதுடன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஊடாக இலங்கையின் பங்குபற்றுதலை தூதரகம் ஆரம்பித்து ஒருங்கிணைத்தது. தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக இணையவழி மெய்நிகர் ரீதியாக நடைபெற்ற இணைப்புத் திட்டத்தில் அந்த நேரத்திலும் மற்றும் 2020 இலும் இலங்கையிலிருந்து பல இலங்கை நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன. இலங்கை நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களுக்கான பல கொள்வனவாளர்களைத் தக்கவைத்துக் கொண்டன.

இந்தக் கண்காட்சியானது சர்வதேச வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், விவசாயப் பொருட்கள் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் உள்ளது.

குவாங்சோவில் உள்ள பல தூதரகங்கள் உட்பட சீனாவில் அமைந்துள்ள 150 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற இந்தக் கண்காட்சியில், 150 க்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கு சுமார் 6000 பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இலங்கையின் துணைத் தூதரகம்,

குவாங்சோ

2021 நவம்பர் 12

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close