இலங்கை விவசாய ஏற்றுமதி சமூகத்தை வலுவூட்டும் நோக்கில், ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு அவை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து, இயற்கை உற்பத்திகளில் விஷேட கவனம் செலுத்தி, 'ஐரோப்பிய ஒன்றிய தரநிலைகள் மற்றும் விவசாய பொருட்கள் துறைக்கான சான்றிதழ்கள்' என்ற தலைப்பில் 2021 நவம்பர் 02ஆந் திகதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட வலைப்பக்கத் தொடரின் 4வது நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியது.
வெபினாரை ஆரம்பித்து வைத்த தூதுவர் மனோரி உனம்புவே, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் விவசாய உணவுப் பொருட்கள் துறையில் ஏற்றுமதித் திறனை அதிகரிப்பதற்காக இலங்கை முயற்சித்து வரும் தருணத்தில், இலங்கை விவசாய ஏற்றுமதி சமூகத்தை வலுப்படுத்துவதற்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு அவை ஆகியவற்றின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். கடந்த ஐந்து மாதங்களில் ஜேர்மனி மற்றும் பரந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் தமது சந்தையை அணுகுவதற்கும் விரிவாக்குவதற்குமான பாதையை எவ்வாறு வழிநடத்துவது என்பதை கற்றுக்கொள்வதிலான ஏற்றுமதியாளர்களின் நீடித்த உற்சாகத்திற்காக அவர் மேலும் பாராட்டினார்.
ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு அவையின் மதிப்புச் சங்கிலி நிபுணரும் வெளி ஆலோசகருமான திருமதி பிரிஜிட் பூர், ஐரோப்பிய தரநிலைகள் மற்றும் விவசாய உற்பத்தித் துறைக்கான சான்றிதழ் அமைப்புகளின் அடிப்படைகள் மற்றும் தொடர்ந்து மாறிவரும் கட்டிடக்கலை மற்றும் போக்குகள் சர்வதேச ஏற்றுமதி சமூகத்தின் சமீபத்திய சிறந்த நடைமுறைகள் மற்றும் வரைவுகள் பற்றிய தரமான புள்ளிவிவர பகுப்பாய்வு குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினார். உற்பத்திகளில் உள்ள சுகாதாரமற்ற கூறுகளின் மாசு அளவுகள், பூச்சி கொல்லிகளுக்கான அதிகபட்ச எஞ்சிய அளவுகள் மற்றும் சுவையூட்டிகள் போன்ற பொருட்களின் பெறுமதி சேர்ப்புக்கான இரசாயணத் தேவைகள் பற்றிய ஆழமான விளக்கங்களுடன், விவசாய உற்பத்திகளுக்கான தொழில்நுட்பத் தரங்கள் குறித்த தனது நிபுணத்துவத்தை திருமதி. பூர் விரிவாகப் பகிர்ந்து கொண்டார். விவசாயப் பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 'விரைவான எச்சரிக்கை அமைப்பு' மற்றும் அதன் செயற்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தை முழுவதும் மிக உயர்ந்த உணவுப் பாதுகாப்புத் தரங்களைப் பராமரிப்பதிலான சீரான தன்மை ஆகியவற்றையும் அவர் மேலும் விவரித்தார்.
100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் ஒரு மணிநேரம் நீடித்த விளக்கக்காட்சி மற்றும் ஊடாடும் கேள்வி பதில் அமர்வு, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைவெளியில் தமது திறனை அதிகரிக்கத் தேவையான உள்ளீட்டை வழங்கியது.
கொழும்பில் உள்ள ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு நிலையத்தின் சர்வதேச வர்த்தக ஆலோசகர் திருமதி. லிண்டா மென்ஸ், நிபுணர் மன்றத்தை நெறிப்படுத்தியதுடன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சித்ராஞ்சலி திசாநாயக்க தனது இறுதிக் கருத்துக்களில் வெபினார் திட்டத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார். தூதரகத் தொடரின் அடுத்த வெபினார் 'நிலையான விநியோகச் சங்கிலிகள் மற்றும் உரிய விடாமுயற்சி' என்ற தலைப்பில் டிசம்பர் 2021 இல் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தூதரகம்,
பேர்லின்
2021 நவம்பர் 10