சவூதி அரேபியாவுக்கான நிமயனம் செய்யப்பட்ட இலங்கைத் தூதுவர் மாண்புமிகு பி.எம். அம்சா தனது நற்சான்றிதழ்களின் பிரதியை உபசரணை விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் காலித் பின் பைசல் அல் சிஹ்லியிடம் 2021 நவம்பர் 02ஆந் திகதி சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார்.
நிமயனம் செய்யப்பட்ட தூதுவரின் புதிய நியமனத்தை அன்புடன் வரவேற்று வாழ்த்தி உரையாற்றிய பிரதி அமைச்சர் காலித் பின் பைசல் அல் சிஹ்லி, தூதுவர் அம்சாவின் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் செழிப்படையும் என சவூதி அரேபியா நம்புவதாகத் தெரிவித்தார்.
தனது பதிலில், தன்னை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்தமைக்காக சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு தூதுவர் அம்சா நன்றிகளைத் தெரிவித்தார். அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தான் உழைக்கப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார். சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.
நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் போது பிரதியமைச்சருடன் கலந்துரையாடல்கள் சுமுகமான வகையில் இடம்பெற்றது. சான்சரியின் தலைவர் துல்மித் வருணவும் தூதுவருடன் இணைந்திருந்தார்.
இலங்கைத் தூதரகம்,
ரியாத்
2021 நவம்பர் 05