தூதரகத்தின் பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்நிய செலாவணி வருமானத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான முதலீட்டை அனுப்புகின்ற கென்யாவில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் நைரோபியிலுள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலைக்கு 2021 ஆகஸ்ட் 31ஆந் திகதி விஜயம் செய்தார்.
ஹெலா கிளாத்திங் லிமிடெட் நிறுவனமானது, இலங்கை, எத்தியோப்பியா, எகிப்து மற்றும் கென்யா முழுவதும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இலங்கைக்கு சொந்தமான நெறிமுறை மற்றும் நிலையான ஆடை உற்பத்தியாளராகும். கென்யாவின் ஆடை உற்பத்தியில் முன்னோடியாக உள்ள ஹெலா ஆடை, கென்யாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 15மூ பங்களிப்புடன் கென்யாவின் மிகப்பெரிய உள்ளாடை உற்பத்தியாளராக முன்னேறியுள்ளது. உள்ளாடைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகமூடிகள் ஆகிய இரண்டு உற்பத்தி அலகுகளை நைரோபியில் ஹெலா ஆடை கொண்டுள்ளது. மேலும் கென்யாவில் ஹெலா முதலீடுகள் 64 இலங்கையர்களுக்கும் 4600 கென்யர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன. இது கென்யாவில் ஆடை உற்பத்தி அலகை நிறுவும் பணியில் உள்ளது.
உயர்ஸ்தானிகரைப் பெற்றுக் கொண்ட ஹெலா ஆடைகளின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. திலங்க ஜினதாஸ, உற்பத்தி அலகுகள் குறித்த சுற்றுப்பயணத்தை வழங்கியதுடன், கென்யாவில் அவர்களது முதலீடுகளின் சுயவிவரம் மற்றும் செயற்றிறன் குறித்து அவருக்கு விளக்கினார். கென்யாவில் உள்ள ஹெலா ஆடைகள் ஆண்டுக்கு 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்புகின்றன. நிறுவனம் வடிவமைப்பு முதல் விநியோகம் வரை உலகளாவிய வகைகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதுடன், அதன் பசுமை முயற்சிகள், புதுமையான வணிகத் தீர்வுகள் மற்றும் நெறிமுறை மற்றும் நிலையான தொழில் சூழல்களுக்கு ஆபிரிக்காவில் நற்பெயரைப் பெற்றுள்ளாக முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார். இலங்கைக்கு அந்நிய செலாவணி வருமானத்தை உருவாக்கும் வெளிப்புற முதலீடுகளையும் இலங்கை ஆதரிக்க வேண்டும் என முகாமைத்துவப் பணிப்பாளர் குறிப்பிட்டார். கென்யாவில் வணிக நலன்களின் விரிவாக்கத்துடன் இருக்கும் நிலையில், இலங்கைக்கு வருமானம் அனுப்பப்படுவது அதிகரிக்கும். மேலும் கென்யாவில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களுக்கு உயர்ஸ்தானிகர் கனநாதன் வழங்கிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டினார். இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்துக்கு நிலையான முதலீடுகள் வெளிநாட்டிலிருந்து அளப்பரிய பங்களிப்பை வழங்குவதாக ஒப்புக் கொண்ட உயர்ஸ்தானிகர், இது சம்பந்தமாக அனைத்து அம்சங்களையும் எளிதாக்குவதற்காகஇலங்கை மற்றும் கென்யாவிலுள்ள அதிகாரிகளுடன் ஈடுபடுவதாக அவர் உறுதியளித்தார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
நைரோபி
2021 செப்டம்பர் 01