பாதுகாப்புச் செயலாளர், ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன அவர்களின் தலைமையிலான இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தூதுக்குழுவொன்று, ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான காலப்பகுதியில் சர்வதேச இராணுவ - தொழில்நுட்ப மன்றம் இராணுவம் - 2021 மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டு - 2021 ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மொஸ்கோ, ரஷ்யாவிற்கு விஜயம் செய்தது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அணிகள் இந்த ஆண்டு பங்கேற்றுள்ளன.
அதி நவீன ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காண்பிப்பதற்கான மிகப்பெரிய தளமான மன்றம் இராணுவம் - 2021, ரஷ்யா மற்றும் பெலாரஸ், பாகிஸ்தான், கஸகஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட பாதுகாப்புத் துறையின் அனைத்து முக்கிய வடிவமைப்பாளர்களையும் உற்பத்தியாளர்களையும் சேகரிக்கின்றது. 2021 ஆகஸ்ட் 23ஆந் திகதி ரஷ்யக் கூட்டமைப்பின் ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ஆரம்பித்து வைக்;கப்பட்ட மன்றம் மற்றும் விளையாட்டுகளின் தொடக்க விழாவில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மன்றத்தில் கலந்துகொண்டபோது, பாதுகாப்புச் செயலாளர் தனது குழுவுடன் இணைந்து ரஷ்ய இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து கற்றறிந்து கொண்டதுடன், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளுடன் இணைந்து பல விளக்கக்காட்சிகள் மற்றும் சந்திப்புக்களில் கலந்து கொண்ட அதே வேளை, உலகப் புகழ்பெற்ற கலாஷ்னிகோவ் உட்பட ரஷ்ய உற்பத்தியாளர்கள், பெலாரஸ் மற்றும் பாகிஸ்தான் கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டார்.
ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன நட்பு இல்லத்திற்கு விஜயம் செய்ததுடன், மன்றம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் பார்வையாளர்கள் மத்தியில் இலங்கையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக இலங்கை தனது கண்காட்சியை ஏற்பாடு செய்த அதே வேளை, இராணுவ விளையாட்டுகள் -2021 இன் படைப்பாற்றல் போட்டியில் பங்கேற்கும் இலங்கையின் கலாச்சாரக் குழு உறுப்பினர்களையும் சந்தித்தார்.
மன்றத்தின் நிகழ்ச்சியில் டேங்க் பயாத்லொன் போட்டி காணப்பட்டது. ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் செர்ஜி ஷோய்கு வழங்கிய அதிகாரப்பூர்வ விருந்துடன் மாலை நேரம் நிறைவுற்றது.
இலங்கைத் தூதரகம்
மொஸ்கோ
2021 ஆகஸ்ட் 31