சோங்கிங்கில் நடைபெறும் ஸ்மார்ட் சீனா எக்ஸ்போ 2021 இல் சீனா மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையிலான அதிக ஒத்துழைப்புக்காக தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன  அழைப்பு

சோங்கிங்கில் நடைபெறும் ஸ்மார்ட் சீனா எக்ஸ்போ 2021 இல் சீனா மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையிலான அதிக ஒத்துழைப்புக்காக தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன  அழைப்பு

டிஜிட்டல் பொருளாதார தொழில் குறித்த சீனா-ங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மன்றத்தில் தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன கலந்து கொண்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கிடையே புதுமை ஒத்துழைப்புக்கான தளத்தை வழங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயலகத்துடன் சோங்கிங் மாநகர அரசாங்கத்தால்  இந்த மன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது.

உயர் தொழில்நுட்பக் கண்காட்சி மன்றமானது அதனுடன் ஒட்டியுள்ள பெரிய கண்காட்சி மையத்தில் நடைபெற்றதுடன், டிஜிட்டல் பொருளாதாரம், பெரிய தரவு மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான  வருங்கால அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் துறைகளில் இடம்பெற்றது. டிஜிட்டல் பொருளாதாரம், இ-வணிகம், கப்பல் போக்குவரத்து மற்றும் ஸ்மார்ட் சுற்றுலா ஆகிய கருப்பொருள்களின் கீழ் துணை மன்றங்கள் நடாத்தப்பட்டன.

ஸ்மார்ட் கப்பல் போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தளங்களை ஊக்குவிப்பது பற்றிய உப மன்றத்தில்  தனது கருத்துக்களை வழங்கிய கலாநிதி. கொஹொன, இலங்கையை தொழில்நுட்ப அடிப்படையிலான சமூகமாக மாற்றுவது அரசாங்கத்தின் முக்கிய தேசியக் கொள்கை நோக்கங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் முறையில் பிராந்தியத்தை இணைப்பதற்கும், டிஜிட்டல் மயமாக்கலின் நன்மைகளை பரப்புவதற்கும் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள வகையில், கடல்சார் பட்டுப் பாதை மற்றும் ஒரு வழி ஒரு பாதை முன்முயற்சியின் தெற்கு மையமாக இலங்கை தன்னை பார்ப்பதாகத் தெரிவித்தார். மன்றத்தை வரவேற்ற சோங்கிங் மாநகர மக்கள் அரசாங்கத்தின் துணை மேயர் திரு. ஜெங் சியாங்டாங், சோங்கிங் ஒரு 'ஸ்மார்ட் நகரத்தை' உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், 'அறிவார்ந்த வாழ்க்கையின்' புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை துரிதப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். வணிக, அரச மற்றும் சிவில் நோக்கங்களுக்காக பெரிய தரவின் மதிப்பை ஆராய்வதன் மூலம், சோங்கிங் பொதுத் தேவைகளான ஸ்மார்ட் போக்குவரத்து, ஸ்மார்ட் மருத்துவப் பராமரிப்பு, ஸ்மார்ட் கல்வி மற்றும் ஸ்மார்ட் சுற்றுலா போன்ற தேவைகளை தொடர்ந்தும் பூர்த்தி செய்யும் முயற்சியை மேம்படுத்துவதாகத் தெரிவித்hர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் கண்காட்சிப் பகுதியில் இலங்கையும் தனது பெவிலியனை வைத்திருந்தது. தொற்றுநோய் காரணமாக, பல இலங்கை நிறுவனங்கள் கண்காட்சியில் பௌதீக ரீதியாக இருடம்பெற முடியவில்லை. எனினும், சில இலங்கைப் பொருட்கள் இலங்கைப் பந்தலில் காட்சிப்படுத்தப்பட்டு கணிசமான கவனத்தை  ஈர்த்தன.

பின்னர், கலாநிதி. கொஹொன சோங்கிங் தொலைக்காட்சி மற்றும் சோங்கிங் சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி  அளித்தார். கலாநிதி. கொஹொன இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் இலங்கையின் அபரிமிதமான சுற்றுலாத் திறன்களை எடுத்துரைத்தார்.

கிரிக்கெட்டை ஊக்குவிக்க இலங்கையிடம் உதவி கோரிய சோங்கிங் கிரிக்கெட் சங்கத்தின் சிரேஷ்ட அலுவலர்களை தூதுவர் கொஹொன சந்தித்தார். அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு கிரிக்கெட் அணியை களமிறக்க  சீனா திட்டமிட்டுள்ளது. இலங்கை தனது விளையாட்டை மேம்படுத்த சோங்கிங்கிற்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்குத் தயாராக உள்ளதாக கலாநிதி. கொஹொன சோங்கிங் கிரிக்கெட் சங்கத்திற்கு உறுதியளித்தார்.

இலங்கைத் தூதரகம்

பெய்ஜிங்

2021 ஆகஸ்ட் 26

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close