தூதுவர், பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி மேதகு இம்மானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார்

தூதுவர், பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி மேதகு இம்மானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார்

12 ஏப்ரல் 2021 அன்று,பாரிஸ் எலைசீ அரண்மனையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, தூதுவர், பேராசிரியை க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி, மேதகு இமானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார்.

ஜனாதிபதி மக்ரொன் அவர்கள், அங்கு சமுகமளித்திருந்த தூதுவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், பிரான்ஸுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சகல தூதுவர்களும் செயற்றிறமுடன் ஈடுபடுவதை ஊக்குவித்தார்.

தூதுவர், பேராசிரியை, திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை வழங்குகையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் வாழ்த்துக்களை, பிரான்ஸ் ஜனாதிபதியிடம் தெரிவித்து, இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இருதரப்பு கூட்டுறவினை, குறிப்பாக முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்தவேண்டுமென்ற அவரது அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்தினார்.

பேராசிரியை, திருமதி க்ஷானிகா அவர்கள், பிரான்ஸ் தூதுவராகவும், அண்டோராவிற்கான சமகால அங்கீகாரமும் பெற்றிருப்பதுடன், யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாகவும் இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தூதரகம்
பிரான்ஸி

 21 ஏப்ரல் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close