பங்களாதேஷ், பிரேசில், கொரியா மற்றும் ஜப்பான் ஆகியநாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பைத் தளமாகக்கொண்ட தூதுவர்கள் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ்குணவர்தனவை நேற்று (03) தனித்தனியாக சந்தித்தனர். வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்புக்களின்போது பங்களாதேஷ், பிரேசில், கொரியா மற்றும்ஜப்பானுடனான இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவித்தல்மற்றும் இலங்கையை கோவிட்-19 தொற்றுநோயிலிருந்துவிடுவிப்பதற்காக இந்த நாடுகளின் சாத்தியமான ஒத்துழைப்புமற்றும் வலுவானதொரு பொருளாதாரத்தை உருவாக்குதல்ஆகியவற்றில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 மார்ச் 04
Please follow and like us: