மேன்மைதங்கிய (திரு.) ச்சன் ஷூவேயுவென் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ச்சீ ஷென்ஹொங் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் மக்கள் சீனக் குடியரசு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020 நவம்பர் 19 ஆந் திகதி காலை 11.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
19 நவம்பர் 2020
Please follow and like us: