வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

 வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, 2020 அக்டோபர் 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆதலால், கொழும்பிலுள்ள சிலின்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு அக்டோபர் 08 மற்றும் 09 ஆகிய எதிர்வரும் இரண்டு நாட்களில் பார்வையாளர்களுக்காக மூடப்படுவதுடன், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் இறப்புக்கள் மற்றும் இறப்பு தொடர்பான ஆவண உதவிகள் மற்றும் 'ஏற்றுமதி ஆவணங்களை' சான்றளித்தல் தொடர்பான கோரிக்கைகள் மட்டுமே முன் நியமன அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

முன் நியமனங்களை பின்வரும் அவசரத் தொலைபேசி அழைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்:

வெளிநாட்டில் இடம்பெற்ற மரணம்: தொலைபேசி: +94 (011) 233 8836 / +94 (011) 233 5942

ஏற்றுமதி ஆவணங்களை சான்றளித்தல்: தொலைபேசி: +94 (011)2338812

 

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

07 அக்டோபர் 2020

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close