மேன்மைதங்கிய (திரு.) ஹான்ஸ் பீட்டர் மொக் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. டொமினிக் ஃபர்க்லர் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020 செப்டம்பர் 30 ஆந் திகதி காலை 11.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01.
Please follow and like us: