நேற்றைய தினம் (2020 ஆகஸ்ட் 4) பெய்ரூட்டில் பாரியதொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக பொது சுகாதார அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெறும் மேலதிக தகவல்களுக்காக இலங்கைத் தூதரகம் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் கிடைத்தவுடன் சம்பவம் குறித்த மேலதிக முன்னேற்றங்கள் தெரிவிக்கப்படும்.
திடீர் வெடிப்பின் விளைவாக பெய்ரூட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வளாகத்திலும், தூதரக அதிகாரிகளின் இல்லங்களிலும் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தூதரக அதிகாரிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
சுமார் 25000 இலங்கையர்கள் தற்போது லெபனானில் வசித்து வருவதுடன், கோரிக்கைகளுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவையை இலங்கைத் தூதரகம் தொடர்ச்சியாக பேணி வருகின்றது.
தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் பின்வருமாறு:
தொலைபேசி: +961 5769585
மின்னஞ்சல்: slemb.beirut@mfa.gov.lk
இலங்கைத் தூதரகம்
பெய்ரூட்
5 ஆகஸ்ட் 2020