மாலைதீவிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்தது

மாலைதீவிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்தது

IMG_8345

மாலைதீவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினூடாக மாலி மற்றும் மாலிக்கு வெளியிலிருக்கும் இலங்கைச் சமூகத்தினருக்கு மத்தியில் விநியோகிக்கும் பொருட்டு, உலர் உணவுப் பொருட்கள் உட்பட 10,000 கிலோ (2000 பொதிகள்) அத்தியாவசியப் பொருட்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் காரணமாக மாலைதீவு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதும், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான அணுகல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுமான கிரேட்டர் மாலியில் பாதிப்படைந்தவர்களால் முகங்கொடுக்கப்பட்டு வரும் பல சிக்கல்களைத் தணிக்கும் முயற்சி இதுவாகும்.

2020 ஜூன் 7, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சரக்கு விமானத்தினூடாக கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாக இந்த உதவிப் பொருட்களை மாலைதீவுக்கு எடுத்துச் சென்றதனுடாக இந்த நோக்கத்திற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஒத்துழைத்துள்ளது. வழங்கப்பட வேண்டிய இந்த தனிப்பட்ட உதவிப் பொருட்கள் ஒவ்வொன்றும் 18 பொருட்களை உள்ளடக்கியதுடன், இதில் உடனடி உணவுப் பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் போன்ற அடிப்படைப் பொருட்கள் மற்றும் சமூகத்தால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவை உள்ளடங்கும்.

ஏறத்தாழ 7000 இலங்கையர்கள் தற்போது மாலைதீவிலிருந்து மீள நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதுடன், அவர்களுள் கிட்டத்தட்ட 2000 பேர் கிரேட்டர் மாலியில் காணப்படுகின்றனர். இலங்கையர்கள் புறப்படுவதற்கு முன்னர், பணம் செலுத்தும் அடிப்படையில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மாலைதீவு அதிகாரிகளுடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஏற்கனவே கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.

பெரும்பாலான தலைநகரங்களில், இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலமாகவும், இலங்கை சமூகத்தைச் சேர்ந்த சங்கங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்தும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதனூடாக வெளிநாடுகளில் குடியேறிய சமூகங்களுக்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றன. நாட்டிற்கு மீளத் திரும்பி வர எதிர்பார்ப்போரை மீள அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தொடர்ந்தும் உதவி வரும் அதே வேளையில், சாத்தியமான சந்தர்ப்பங்களில் குறித்த இடங்களில் ஏற்படும் மருத்துவ அவசரநிலைகளுக்கும் அவர்கள் உதவிகளை மேற்கொள்கின்றார்கள்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
9 ஜூன் 2020

Video Link: https://drive.google.com/file/d/1sF1WeRYp1pnHbq7bbhIRgkknbStrsYKc/view?usp=sharing

IMG_8414IMG_8438

1

IMG_8548

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close