வெளிநாட்டில் நடைபெறும் பிறப்புகள் / திருமணங்கள்

  1. வெளிநாட்டில் பிறப்பை பதிவு செய்வதற்கு

தகுதி: இலங்கை பெற்றோர்களுக்கு இலங்கைக்கு வெளியில் பிறந்த பிள்ளைகள்.(குறைந்த பட்டசம் பெற்றோர்களில் ஒருவராவது இலங்கை பிரசையாக இருத்தல் வேண்டும் / பிள்ளையின் பிறப்பின் போது இரட்டை பிரசாவுரிமையை கொண்டிருத்தல் வேண்டும்)

கொடுப்பனவு: ரூபா. 3,900 தொகையொன்றை கொன்சியூலர் அலுவல்கள் பிரிவில் செலுத்தல் வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட  இரசீதை   பதிவாளர் நாயக்த்தின் திணைக்களத்திலுள்ள மத்திய பதிவு அறைக்கு பிறப்பானது பதிவு செய்யப்படுவதற்கும்  பிறப்புச் சான்றிதழ்  விநியோகம் செய்யப்படுவதற்கும் சமர்ப்பித்தல் வேண்டும்.

கொடுப்பனவு நேரம்: வேலை நாட்களில் 0830 மணி முதல் 1500 மணி வரை

அவசியமான உதவி ஆவணங்கள்

    • பெற்றோரில் ஒருவர் சமுகமளிக்க வேண்டும்
    • கடவுச்சீட்டின் தரவுப்பக்க பிரிதியொன்று
    • தேசிய அடையாள அட்டையின் ஆதாரம்
    • வெளிநாட்டு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் / பிள்ளையின் வைத்தியசாலை பதிவு
    • பெற்றோரின் பிரசாவுரிமை சான்றிதழ் / இரட்டை பிரசாவுரிமை சான்றிதழ்

இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

2ஆம் மாடி, செலிங்கோ கட்டிடம்
ஜனாதிபதி மாவத்தை
கொழும்பு 01
இலங்கை.
 
தொலைபேசி: +94 112 446 302 / +94 112 338 812
தொலைநகல்: +94 112 473 899
மின்னஞ்சல்: consular@mfa.gov.lk

Close