தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கேஅழுத்தவும்.
உண்மைச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு, அது இந்த அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக சபையினால் முத்திரையிடப்பட்டிருந்தால் அவை சான்றுறுதிப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏற்றுமதி ஆவணங்களின் தொகுப்பொன்றினை சான்றுப்படுத்துவதற்காக ரூபா. 6000/- அறவிடப்படும். ஒவ்வொரு தனியான உண்மைச் சான்றிதழுக்கும் தனித்தனியாக கட்டணம் அறவிடப்படும். ஒவ்வொரு உண்மைச் சான்றிதழிலும் பின்வரும் ஆவணங்கள் தொகுப்பாக இணைக்கப்படலாம்.
உண்மைச்சான்றிதழ்
விலைப்படடியல் / வர்த்தக விலைப்படடியல்
கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு
சுகாதார சான்றிதழ்கள்
ஆய்வுகூட சான்றிதழ்கள்
ஆய்வு அறிக்கைகள்
தூய்மைச் சான்றிதழ்
தடுப்பக்காப்பு சான்றிதழ்கள்
தரப்பினரின் பிரதி
மேலும், பின்வரும் ஆவணங்கள் உண்மைச்சான்றிதழின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அவை ஒவ்வொன்றிற்கும் ரூபா. 800.00 அறிவிடப்படும்.
சுகாதார சான்றிதழ்கள்
ஆய்வுகூட சான்றிதழ்கள்
ஆய்வு அறிக்கைகள்
தூய்மைச் சான்றிதழ்
தடுப்பக்காப்பு சான்றிதழ்கள்
இலவச விற்பனை சான்றிதழ்கள்
பண்பு மற்றும் தரச் சான்றிதழ்கள்
சத்தியக்கடதாசிகள் மற்றும் அட்டோனி நியமனப் பத்திரங்கள் (அவை உயர் நீதிமன்றத்தினால் கட்டாயமாக சான்றுப்படுத்தப்படல் வேண்டும்)
தரப்பினரின் பிரதி
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :