வியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்
அ. கம்பனி ஒன்றின் பதிவுச் சான்றிதழ்
கம்பனிகள் பதிவாளரிடம் இருந்து அண்மையில் எடுக்கப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதியுடன் அல்லது உண்மைப் பிரதியுடன் கூடிய மூலப்பிரதிகள் அல்லது மூலப்பிரதி ஆவணங்களுடன் அண்மையில் செலுத்தப்பட்ட வரிப் பற்றுச்சீட்டுடன் நிழற் பிரதி சான்றொப்பத்திற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். கம்பனி பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட படிவம் 20 உம் கம்பனியின் கையொப்ப அதிகாரத்தினை சரிபார்ப்பதற்கான துணை ஆவணமாக வேண்டப்படும்.
ஆ. தனிப்பட்ட வியாபார பதிவுச் சான்றிதழ்
தனிப்பட்ட வியாபார பதிவுச் சான்றிதழ் ஒன்றினை சான்றொப்பமிடுவதற்கு அண்மையில் கொடுப்பனவு செய்யப்பட்ட பண பற்றுச் சீட்டுக்களுடன் சேர்த்து பிரதேச செயலாளரினால் வழங்கப்படும் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியுடன் சேர்த்து மூலப்பிரதியினை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இ. கூட்டிணைவு பற்றிய உறுப்புரை அல்லது சபைத் தீர்மானங்கள்
கம்பனி ஒன்றின் கூட்டிணைவு பற்றிய உறுப்புரையினை அல்லது சபைத் தீர்மானங்களை சான்றொப்பமிடுவதற்காக பின்வரும் இரு வழிமுறைகள் விண்ணப்பதாரரினால் பின்பற்றப்பட வேண்டும்.
- கம்பனி ஒன்றின் கூட்டிணைப்பு பற்றிய உறுப்புரை அல்லது கம்பனி ஒன்றின் சபைத் தீர்மானங்கள், கம்பனிகள் பதிவாளரிடம் பதியப்படல் / குறிக்கப்படல் வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட / குறிக்கப்பட்ட ஆவணத்தின் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதி சான்றொப்பத்திற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அல்லது
- கம்பனியின் சட்ட அலுவலரின் / கம்பனிச் செயலாளரின் (சட்டத்தரணி) முன்னிலையில் சபை உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்ட கூட்டிணைப்பு மூல உறுப்புரையினை அல்லது சபைத் தீர்மானத்தினை விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் உயர் நீதிமன்ற சான்றிதழுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு: கம்பனி பதிவுச் சான்றிதழும் படிவம் 20 உம் துணை ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஈ. படிவம் 20
கம்பனி ஒன்றின் படிவம் 20 ஐ சான்றொப்பமிடுவதற்கு விண்ணப்பதாரர் கம்பனிகள் பதிவாளரினால் வழங்கப்படும் படிவம் 20 ஆவணத்தின் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதி ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு: கம்பனி பதிவுச் சான்றிதழ் துணை ஆவணமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
உ. கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளின் அறிக்கை
கம்பனி ஒன்றின் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள், பட்டயக் கணக்காளர் ஒருவரினால் கையொப்பமிடப்பட வேண்டும். அத்துடன் அவரது உண்மைத்தன்னை அவருக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கும் நிறுவனத்தினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும் (இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம்)
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு