2019 ஆகஸ்ட் 02ஆந் திகதி தாய்லாந்துஇ பெங்கொக்கில் நடைபெற்ற 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் உரையாற்றுகையில்இ பயங்கரவாதம்இ வன்முறை தீவிரவாதம் மற்றும் சைபர் குற்றங்கள் உள்ளடங்கலான பாரம்பரியமான மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு விடயங்களுக்கு எதிராக செயற்படுவதற்கான இணைந்த ப+கோள முயற்சிகளுக்கான தேவைப்பாடு குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கருத்து தெரிவித்தார். இந்த சவால்களிலிருந்து மீள்வதற்காக ஆசியான் பிராந்திய மன்றத்தில் பங்குபற்றுபவர்களுக்கு மத்தியிலான ஆழமான தீர்மானம் குறித்து அமைச்சர் மாரப்பன சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான முயற்சிகள்இ அணுச்செறிவ+ட்டலை தவிர்ப்பதற்கான செயலணியை வலுவ+ட்டுதல்இ இராஜதந்திர தவிர்ப்புஇ வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்து போராடுதல்இ பெண்கள்இ சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவதனை உறுதிப்படுத்தல் போன்ற விடயப்பரப்புக்களிலான அளவீடுகளை கட்டியெழுப்பிஇ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை விரிவாக்கம் செய்வது தொடர்பில் 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும்இ இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் நிய+சிலாந்துஇ பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை செயற்பாடுகள் உள்ளடங்கலான பயங்கரவாத செயற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தொடரின் போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்காகஇ அதற்கான அடிப்படைக் காரணியை குறிப்பிடுதல் மற்றும் இந்த முயற்சிக்காக ஆசியான் பிராந்திய மன்றத்தில் பங்குபற்றுபவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முறையான அணுகுமுறையை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றுக்கான தேவைப்பாடு இக் கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டப்பட்டது. பொதுவான விடயப்பரப்புக்களிலான பிராந்திய மற்றும் சர்வதேச நலன்கள் குறித்தும் அமைச்சர்கள் கலந்துரையாடிஇ தமது கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.
இந்த மன்றத்தில் பங்குபற்றிய அதே வேளைஇ 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் பக்கவாட்டு நிரலில் பங்களாதேஷின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமென்இ இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்இ நிய+சிலாந்தின் பிரதி பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வின்ஸ்டன் பீரிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் உப தலைவர் பிரடரிகா மொகெரினி ஆகியோருடன் அமைச்சர் மாரப்பன இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார். இந்த சந்திப்புக்கள் மிகவூம் முக்கியமான மற்றும் தற்போதைய இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதுடன்இ இந்த நாடுகளுடனான தற்போதைய உறவூகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியிருந்தன.
1994இல் நிறுவப்பட்ட ஆசியான் பிராந்திய மன்றமானது 27 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. தற்போதைய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான அபிவிருத்தி ஒத்துழைப்பு அளவீடுகள் ஆகியன குறித்து கலந்துரையாடுவதற்கான அமைப்பினை வழங்கும் இந்த மன்றமானதுஇ இந்து - பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து உறுப்பு நாடுகள் கலந்துரையாடுவதற்கான முக்கியமான தளமாக அமைகின்றது. இலங்கை ஆசியான் பிராந்திய மன்றத்தின் பங்குபற்றும் நாடாவதுடன்இ இந்த மன்றத்தில் 2007ஆம் ஆண்டு இணைந்து கொண்டது.
ஆசியான் பிராந்தியத்துடன் இணைந்து ஈடுபடுவதற்கான முக்கியத்துவத்தினை அதிகரிக்கும் நோக்கில்இ ஆசியானின் துறைசார் கலந்துரையாடல் பங்காளராக வருவதற்கு இலங்கை விரும்புவதுடன்இ அதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தேவையான அளவீடுகளை முன்னெடுத்துள்ளது.
2019 ஆகஸ்ட் 02
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு