இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையிலான அரசியல் ஆலோசனைகளின் முதல் அமர்வு கொழும்பில் நிறைவுற்றது.

இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையிலான அரசியல் ஆலோசனைகளின் முதல் அமர்வு கொழும்பில் நிறைவுற்றது.

Photo-1

இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையிலான அரசியல் ஆலோசனைகளின் முதல் அமர்வு 10 மே 2019 அன்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் ஆரம்பமானது.

இருபக்க கலந்தாலோசனைகளின் முதல் உத்தியோகபூர்வ அமர்வில் இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையிலான முன்னுரிமைப்படுத்தப்பட்ட துறைகளில் வலுவான ஒத்துழைப்புக்கு அவசியமான ஓர் புதிய திட்ட வரைவு இனங்காணப்பட்டது.

இலங்கை தூதுக் குழுவின் தலைவரும் வெளிவிவகார செயலாளருமான ரவிநாத ஆர்யசிங்க அவர்கள் துருக்கி தூதுக் குழுவினை கலந்தாலோசனைக்கு வரவேற்றதுடன், 1948 முதல் கடந்த 71 வருடங்களாக தொன்று தொட்ட இருபக்க ஈடுபாட்டுக்கான இலங்கையின் அர்ப்பணிப்புக்களை மீள வலியுறுத்தினார்கள். மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து துருக்கி அரசாங்கம் மற்றும் அதன் மக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவி மற்றும் ஆதரவு என்பவற்றுக்கு இலங்கையின் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார். துருக்கி தூதுக் குழுவின் தலைவரும் துருக்கி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சருமான சதாத் ஓனல், நீடித்த இருபக்க இணைவு தொடர்பாக கருத்து தெரிவித்தவராக உயிர்த்த ஞாயிறு நிகழ்வின் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான நாட்டின் இயலுமை தொடர்பான நம்பிக்கையை வெளியிட்டதோடு அவற்றை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உடன்பட்ட திறனையும் மீள்வலியுறுத்தினார். இதன் நிமித்தம் துருக்கியின் உடனடி உதவிகளையும் பிரதி அமைச்சர் ஓனல் மீளுரைத்தார்.

இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையேயான தொடர்கின்ற மற்றும் சாத்தியமான ஒத்துழைப்புக்களை பரந்தளவில் மீள்பார்வை செய்வதற்கு இக்கலந்தாலோசனைகள் வழியமைத்தது.  இவ் ஈடுபாட்டின் மேலதிக ஒன்றிணைப்பிற்காக இருபக்க சட்டரீதியான கட்டமைப்பொன்று வரையப்படும். அது சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம், கலாசரம், மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளில் பரஸ்பர பிரயோசமிக்க விளைவுகளை உருவாக்கும்.

எதிர்கால நடவடிக்கைகளில், இருபக்க இணைந்த பொருளாதார ஆணைக்குழுவொன்றினை உருவாக்குவதற்காக துருக்கியின் உயர்மட்ட, பலதரப்பட்ட வியாபார தூதுக் குழுவொன்றின் இலங்கைக்கான விஜயத்தினைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலா இயக்குநர்கள் அல்லது பயண முகவர்களைக் கொண்ட ஓர் தூதுக் குழுவின் துருக்கிக்கிக்கான விஜயமொன்றும் இனங்காணப்பட்டது. பிராந்திய மற்றும் பல்தரப்பு மேடைகளிலுள்ள தீவிரவாதம் போன்ற பொது சவால்களை வெற்றிகொள்வதற்கும் பகிரப்பட்ட பொருளாதார ஆர்வங்களை பின்தொடர்வதற்குமான இலங்கை மற்றும் துருக்கியின் தேவைகள் தொடர்பிலும் கலந்தாலோசனை கவனம் செலுத்தியது. 2020 இன் ஆரம்பத்தில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டாவது அரசியல் கலந்தாலோசனை அமர்வில் முன்னேற்றங்களையும், விளைவுகளையும் உட்சாகத்துடன் பரிசீலனை செய்வதற்கு இரு தரப்பும் உடன்பட்டன.

துருக்கிய பிரதி வெளிவிவகார அமைச்சர் சதாத் ஓனல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை 10 மே 2019 அன்று சந்தித்தார்.

மேலதிக செயலாளர் சுமித் நாகந்தல மற்றும் ஐரோப்பா, பொருளாதார விவகாரங்கள் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவுகளின் பணிப்பாளர் நாயகங்களும் இந்த இருதரப்பு கலந்தாலோசனைகளில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

12 மே 2019

Photo- 2 Photo- 3 Photo- 4

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close