10-11 ஏப்ரல் 2019 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் நடமாடும் கன்சியூலர் சேவையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நடாத்தவிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்படுகின்ற இந்த நடமாடும் கன்சியூலர் சேவை 10 ஏப்ரல்,புதன்கிழமையன்று காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் 11 ஏப்ரல், வியாழக்கிழமை செங்கலடி பிரதேச செயலகத்திலும் நடாத்தப்படவிருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடாத்தப்படுகின்ற இந்த நடாமாடும் சேவையினூடாக ஆவனங்களை சான்றுறுதிப்படுத்தல், வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட இலங்கையர்களின் குடும்பங்களுக்கான உதவி, வெளிநாடுகளில் இடம்பெற்ற பிறப்பு மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், இழப்பீடு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பான உதவி உள்ளடங்களாக கன்சியூலர் சேவைகள் போன்றவற்றை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொள்ள முடிவதுடன், வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் தொடர்பு கொள்ளத்தக்க தொலைதொடர்பு மற்றும் முகவரி தொடர்பான தகவல்கள், வெளிநாடுகளில் வாழ்கின்ற மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்ற இலங்கையர்களுக்கு அத்தூதுரகங்களால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பான தகவல்கள் என்பனவும் பொது மக்களுக்காக இந்த நடமாடும் சேவையில் வழங்கப்படவிருக்கின்றது.
இந்த நடமாடும் சேவை கன்சியூலர் சேவைகளை வழங்குவதற்கு மேலதிகமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார இராஜதந்திரம் மற்றும் பொது இராஜதந்திரம் ஆகிய பிரிவிகளின் நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும் மக்களுக்கு தெளிவு படுத்தவிருக்கின்றது.
07 ஏப்ரல் 2019