மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான திலக் மாரபன அவர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை: 20 மார்ச் 2019 ஜெனீவா

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான திலக் மாரபன அவர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை: 20 மார்ச் 2019 ஜெனீவா

Image 001

நிகழ்ச்சி நிரலில் இரண்டாவது விடயமான இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை என்பவற்றை மேம்படுத்துதல் தொடர்பாக மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருடனான நெருங்கிய உரையாடல் சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான திலக் மாரபன அவர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை: 20 மார்ச் 2019 ஜெனீவா

சுருக்கமான அறிக்கை

திரு. தலைவர்,

உயர்ஸ்தானிகர் அவர்களே மற்றும் பிரதிநிதிகளே,

2017ம் ஆண்டு முதல் மனித உரிமைகள் முன்னணி தொடர்பாக இலங்கையின் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை இந்த அமர்வில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். பாராளுமன்ற சகபாடி கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, வடமாகாண ஆளுநர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் மற்றும் சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்களும் என்னுடன் கலந்துகொண்டிருக்கின்றனர்.

உயர்ஸ்தானிகர் அவர்களே,

அனைத்துப்பங்குதாரர்களையும் நோக்கி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறந்த, ஆக்கபூர்வமான, ஒத்துழைப்புமிக்க உங்களது அறிக்கையினூடான ஒப்புதலுக்கு ஆரம்பத்திலேயே உங்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

ஓவ்வொரு நாட்டினதும் போருக்குப்பிந்திய சூழல் தனித்தன்மை வாய்ந்தது என்பதில் நீங்கள் உடன்படுவீர்கள். பிறரது அனுபவங்களிலிருந்து எமக்கு படிப்பினை பெற முடியும். ஆனால் அடிப்படையில் பார்க்கும்போது நாட்டின் கடமைகளில் முதன்மையானவற்றின் அச்சாணியை நாங்கள் செயற்படுத்துவதினூடாக நல்லிணக்கத்திற்கான எமக்கேயுரிய வழிமுறை உள்நாட்டின் மூலமே செயற்படுத்தப்பட வேண்டும்:

  • உண்மையைக் கண்டறிதல் என்ற பகுதியில், காணமல் போனோருக்கான அலுவலகம் சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. போதுமான வளங்களுடன் அது செயற்படுத்தப்படுகின்ற அதேவேளை உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றினை ஸ்தாபிப்பதற்கு தேவையான சட்ட வரைவுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை கரிசனை காட்டுகின்றது.
  • நீதித்துறையை பொறுத்தவரையில், பயங்கரவாதத் தடை சட்டத்திற்குக் கீழாலுள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு அதற்குக் கீழாலுள்ள வழக்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சர்வதேச தரங்களையும் சிறந்த நடைமுறைப்படுத்தல்களையும் உறுதிப்படுத்துகின்ற வகையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முன்னுரைக்கப்பட்ட சட்டங்களினால் பயங்கரவாதத் தடை சட்டத்தை மாற்றுவதற்கான கலந்தாலோசனைகள் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
  • இழப்பீடுகளைப் பொறுத்தவரையில், இழப்பீடுகளுக்கான ஓர் அலுவலகம் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையினால் மூன்று ஆளுநர்கள் பதவிப்பிரமாணத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2019ம் ஆண்டு பாதீட்டில், இல்லாமைக்கான சான்றிதழைப் பெற்ற, காணாமற்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுக்கு 500 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.
  • திரும்பவும் பிரச்சினைகள் நிகழாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை முழுமைப்படுத்துவதற்காக நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

 உயர்ஸ்தானிகர் அவர்களே,

இலங்கைப் பாராளுமன்றத்தில் 14 மார்ச் 2019ம் திகதி நான் குறித்துக்காட்டியது போல, 2009ம் ஆண்டில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பூமிகளில் 75 வீதமே விடுக்கப்பட்டுள்ளது என ஆளுநரின் அறிக்கையில் 35வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தரவானது சரியான தரவுடன் குறிப்பிடத்தக்களவு வித்தியாசப்படுகின்றது. மார்ச் 2019 இல் 88.87 வீதமான அரச காணிகளும் 92.16 வீதமான தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அறிக்கையில் 23 வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னாரிலுள்ள எலும்புக்கூடு அகழ்வுப் பணியைப் பொறுத்தவரையில், எலும்புக்கூடுகள் இலங்கை பாரியளவில் ஐரோப்பிய காலனித்துவத்திற்குட்பட்ட காலப்பகுதியின்போது கி.பி. 1499 – கி.பி. 1719 க்குற்பட்டவையென ஐக்கய அமெரிக்க ஆய்வுகூட அறிக்கை வெளியாகியிருந்தும்கூட அறிக்கையானது “ஏனைய அகழ்வுகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்” என எதிர்வுகூறுகின்றது. இந்த வினைமைமிக்க விடயம் தொடர்பாக பொது அறிக்கையொன்றில் இவ்வாறான கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படமுடியாது. அதற்கும் மேலோக அறிக்கையிலுள்ள ஏனைய வலியுறுத்தல்களின் நம்பகத்தன்மையிலும் சந்தேகத்தை உண்டுபண்ணலாம்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையின் பத்தி 68 (சி) யைப் பொறுத்தவரையில் (A/HRC/40/23) ஓர் கலப்பு நீதிமன்றத்திற்கான சட்டமியற்றலுக்கு அழைப்பு விடுக்கின்றது. இது தொடர்பாக எமது நிலைப்பாட்டினை தெளிவு படுத்துவதற்கு விரும்புகின்றேன். அது வருமாரு:

இலங்கை அரசு உயர் அரசியல் மட்டத்தில், பகிரங்கமாகவும் தற்போதைய மற்றும் முன்னாள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர்கள் மற்றும் ஏனைய இடைத்தரகர்களுடனான சந்திப்புகளிலும் யாப்பு மற்றும் சட்ட சவால்கள் இலங்கையின் நீதிச் செயற்பாடுகளில் இலங்கைப் பிரஜையல்லாதவர்களை உள்ளடக்குவதனை விட்டும் தடுக்கின்றன என தெளிவு படுத்தியிருக்கின்றோம். ஏதாவதொரு செயற்பாட்டில் இலங்கை பிரஜையால்லாதவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுது 2/3 பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பு வாக்கு வழங்கி யாப்பில் மாற்றம் கொண்டுவரப்படுதனூடாகவும் பொதுஜன வாக்கெடுப்பினூடாகவுமே அன்றி சாத்தியப்படமாட்டாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.

நேரக் கட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலக அறிக்கையின் சம்பந்தப்பட்ட பத்திகளுக்கு விரிவான பதிலை முன்வைக்கக் கூடிய எனது முழு அறிக்கையை பதிவு செய்வதற்கு விரும்புகின்றேன்.

உயர்ஸ்தானிகர் அவர்களே,

அதிகரித்த பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு உலகு முகம் கொடுக்கும் ஒரு தருணத்தில், கடந்த வருடம் இந்த சபையில் நான் குறிப்பிட்டது போல பிரச்சினைகளின் போது இலங்கை பாதுகாப்புப் படையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக பிரகடணப்படுத்தப்பட்ட ஒரு குழுக்கெதிரான நடவடிக்கையே அன்றி எந்தவொரு சமூகத்திற்குமெதிரான நடவடிக்கையல்ல. மேலும், 2015 இலங்கை தொடர்பான விசாரனை அறிக்கையிலோ அல்லது வேறு ஏதும் உத்தியோகபூர்வ ஆவணங்களிலோ தனிநபர்களுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுகளோ அல்லது மனிதத்துக்கெதிரான குற்றச்சாட்டுக்களோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டிய அம்சமாகும். குற்றங்களில் ஈடுபட்டதை விசாரணைகள் உறுதிப்படுத்தாமல் சேவையில் இருக்கின்ற அல்லது ஓய்வுபெற்ற இலங்கை பாதுகாப்புப் படை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களது உரிமைகளை பிடுங்குவது அநீதியாகும்.

இந்த வலியுறுத்தல்கள் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா முகவர்கள் மேலும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச நிறுவனங்களின் சுதந்திரமான கணிப்பீடுகளுக்கும் நேரடியாக முரண்படுவதுடன் 12 ஒக்டோபர் 2017 அன்று ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரபுக்களின் இல்லத்தில் திருத்தியமைக்கப்பட்ட விடயங்கள் மட்டுமல்லாது பொதுத்தளங்களிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் எழுத்துக்களுக்கும் முரண்படுகின்றன .

 உயர்ஸ்தானிகர் அவர்களே,

கொடுக்கப்பட்ட இந்தப் பின்னணியில், இணை அனுசரணை வழங்குகின்ற நாடுகள் உட்பட பல நாடுகள் பேச்சுவார்த்தைகளில் இந்த கள உண்மைகளை ஒப்புக்கொள்கின்ற அதேவேளை, கடிதத்திலுள்ள பொருத்தமின்மைகள் திருத்திக் கொள்ளப்படவேண்டும். அதேபோன்று சர்வதேச சிறந்த செயன்முறைகளுடன் பொருந்துகின்ற புத்தாக்க மற்றும் சாத்தியமான உள்நாட்டு பொறிமுறைகள் மற்றும் செயன்முறைகளை கண்டு கொள்வதில் இலங்கை ஊக்கப்படுத்தப்படுவதோடு உதவியளிக்கப்படவும் வேண்டும். குறிப்பாக அண்மையில் 2018ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட அரசியல் அம்சங்களின்போது எமது நீதி, அதிகார மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் சுதந்திரம் மற்றும் தன்முனைப்பு என்பவற்றை பிரதிபலித்தது அவற்றை தீர்த்தன. ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல “பாதிக்கப்பட்டவர்களினதும் சமூகத்தினதும் நம்பிக்கையை பாரியளவில் பெற்றுக்கொள்ளல்” என்பதனூடாக மட்டுமே இந்த நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவதற்கு எம்மால் முடியுமாக இருக்கும்.

அரசாங்கம் சார்பாக, மேலே உள்ள அளவுகோல்களின் அடிப்படையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இலங்கை தொடர்ந்து கடமையாற்றும் என நான் மீள வலியுறுத்துகின்றேன்.

நன்றி.

https://hansard.parliament.uk/Lords/2017-10-12/debates/14CAA83D-8895-4182-8C4F-D964E0A5B399/SriLanka;

https://parliament.lk/uploads/documents/paperspresented/report-of-paranagama.pdf

http://margastorehouse.org/The%20Last%20Stages%20of%20the%20war%20in%20Sri%20Lanka.pdf;

--------------------------------------------------------------

முழு அறிக்கை

கௌரவ தலைவர் அவர்களே,

கௌரவ உயர் ஆணையாளர் / பிரதி உயர் ஆணையாளர் அவர்களே,

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40வது அமர்லில் பங்கேற்றுள்ள பேரவை உறுப்பினர்களே,

சீமாட்டிகளே மற்றும் கனவான்களே.

2017 ஆம் ஆண்டின் இறுதி மதிப்பீட்டிற்குப் பின்னரான மனித உரிமைகள் பற்றிய இலங்கையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில் பகிர்ந்து கொள்வதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எனது சக பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, துணை சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே மற்றும் நிரந்தர பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ் ஆகியோருடன் இத்தருணத்தில் கௌரவத்துடன் இணைந்திருக்கிறேன்.

மனித உரிமைகள், நீதி, சட்ட விதிமுறை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் உலகளாவிய மரபுகளை உள்ளடக்கிய ஒரு நாட்டிற்கான எமது அரசாங்கத்தின் நோக்குகள் குறித்து இந்த பேரவையின் அமர்வுகளில் இலங்கை ஈடுபாடுகளுடன் உள்ள அதேவேளை, மக்களுக்குக்கான அடிப்படை பாதுகாப்பு மற்றும் ஒரு நிலையான எதிர்காலத்தினை வழங்குவதற்காக, வறுமையை ஒழிக்கவும், பொருளாதாரப் பங்கீடுகளை அனைவருக்கும் உறுதி செய்யவும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றது.

கௌரவ உயர் ஆணையாளர் அவர்களே,

நாட்டிற்கு உட்பட்ட மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்களுடன் இணைந்ததும், மற்றும் இந்த சபையின் செயல்முறைகள் மற்றும் வழிமுறைகளுடன் இணைந்ததுமான இலங்கை அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டுள்ள வெளிப்படையான, ஆக்கபூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறையின் அறிக்கையொன்றை வெளியிட்டமைக்காக தங்களுக்கு ஆரம்பத்திலேயே நாங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். முழுமையாக ஈடுபடுவதே எமது நோக்கமாக இருந்தது ஆதலால், நல்லிணக்கத்தைஅடைவதற்கான எமது ஆழமான வேரூன்றிய அர்ப்பணிப்பு அதற்கு சான்றான வெளிப்பாடாக அமைந்தது. நல்லிணக்கத்தை அடைவதற்கு இலங்கை தொடர்ந்தும் ஈடுபாடுடையதாக அமைவதுடன், அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக தொடர்ந்தும் நிலையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஏனையவற்றுக்கு மத்தியில், கருத்து மற்றும் ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம், சிவில் சமூக ஆலோசனை, தகவல் கட்டமைப்பின் வலுவான உரிமையை ஸ்தாபித்தல், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலாக சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதனை உள்ளடக்கிய சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மற்றவற்றுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் குறித்து தொடர்ச்சியான அமர்வுகளில் இந்த சபைக்கு நாங்கள் அறிவித்துள்ளோம்.

ஒவ்வொரு நாட்டிலும் பிந்தைய மோதல் சூழ்நிலையானது தனித்துவமானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஒரே மாதிரியான முழுமையான நிவாரணங்கள் பயன்படுத்தப்படக்கூடிய இரண்டு வகையான பிந்தைய மோதல் சூழல்களும் இல்லை. மற்றவர்களின் அனுபவங்களில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ளலாம், எனினும், நல்லிணக்கத்திற்கான எமது சொந்த பாதையானது உள்நாட்டு அடிப்படைகளிலிருந்தே ஆரம்பமாவதாக அமையும் என்பதுடன், அதன் அடிப்படையிலேயே நாங்களும் செயற்படுகின்றோம். நிலைமாறுகால நீதிக்கான செயல்முறையின் அடிப்படையானது, அரசின் கடமைகளின் செயற்பாட்டுக் கோட்பாடுகளில் கவனம் செலுத்துகின்றது. உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதம் ஆகியவற்றை அரசே வழங்குதல் வேண்டும். 2015 ல் அத்தகையதொரு செயற்பாட்டிற்கு இலங்கை உறுதியளித்ததுடன், இந்த தூண்களில் முன்னோக்கி நகர்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வருகின்றது.

உண்மையை கண்டறிவதற்கான விடயம் தொடர்பில், காணாமல் போனோர் அலுவலகமானது (OMP) சட்டத்தால் நிறுவப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அமைச்சரவையானது தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான வரைவு சட்டத்தை பரிசீலித்து வருகின்றது. நீதி தொடர்பான விடயத்தில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் மீளாய்வு செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்கு நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டுள்ள அதே வேளை, சர்வதேச தரங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இயைபான வகையிலான உத்தேசிக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பிரதியீடு செய்வதற்கு பாராளுமன்றத்தில் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இழப்பீடு தொடர்பில், 2018 அக்டோபரில் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்திற்கான சட்டமானது, குறித்த சட்டத்தின் அடிப்படையில் இழப்பீட்டு அலுவலகமொன்று நிறுவப்படுவது குறித்து குறிப்பிட்டதுடன்,  அதற்கு நியமிக்கப்படுவதற்காக மூன்று ஆணையாளர்கள் அரசியலமைப்பு பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் அதேபோன்று செய்யப்படும் முறைப்பாடுகளை கவனிக்கவும், உறுதிப்படுத்தவும், ஒப்புக்கொள்ளவும் மற்றும் தொடர்புகொள்ளவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, அவை நேர்மை மற்றும் இயற்கை நீதிக்கான செயற்பாட்டு விதிகளை பின்பற்றுதல் வேண்டும். மோதலின் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக, நல்லிணக்க செயற்பட்டியலை பூரணப்படுத்துவதனை நாங்கள் உறுதியுடன் மேற்கொண்டுள்ளோம்.

இந்த வழிமுறைகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், நல்லிணக்க செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் மற்றும் பணிக்குழு ஆகியன, அவற்றின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் பரந்த அளவிலானதொரு ஆலோசனையை மேற்கொண்டன. இலங்கை மக்களால் இந்த வழிமுறைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக, அத்தகைய ஆலோசனை அணுகுமுறையானது அவசியமானது என்பதை கௌரவ உயர் ஆணையாளர் ஏற்றுக்கொள்வீர்கள்.

கௌரவ உயர் ஆணையாளர் அவர்களே, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையின் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த அரசியல் முன்னேற்றங்கள் குறித்து குறிப்பிடும் 10 - 13 வரையான பந்திகளின் விடயங்களை அவதானிக்கையில், குறித்த கேள்விக்குரிய காலத்தில், இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நம்பகத்தன்மையை வழங்கும் முகமாக, அப்போது ஏற்பட்ட அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினைகளை விரைவாக தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் உயர் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டன.  மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கானது பாதுகாப்பு படையினர், பொலிசார் மற்றும் பொதுச்சேவையினால் ஒரு முன்மாதிரியான விதத்தில் பராமரிக்கப்பட்டன. இது இலங்கையின் வலுவான ஜனநாயக நம்பிக்கைச்சான்றுகள் மற்றும் நிறுவன நிலைத்தன்மையை தெளிவாக வெளிப்படுத்தி நின்றது.

15ஆம் பந்தியின் விடயங்கள் தொடர்பில், நிலைமாறுகால நீதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஏற்கனவே நிறுவப்பட்ட நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதாக அமைதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகளின் முடிவுகளானது நீதித்துறை செயல்முறையின் எத்தகைய பரிசோதனைகளையும் எதிர்கொள்ள ஏதுவானதாக அமைதல் வேண்டும். ஆதலால், நிறுவன கட்டமைப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்போது, இயற்கை நீதியின் உள்ளடக்கமாகவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் ஆகையினால், குறித்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் விளைவாக ஏற்படும் நன்மைகள் இயற்கை நீதியின் கொள்கைகளுடன் இயைபானதாக அமைதல் வேண்டும் என நினைவு கூறலாம்.

17ஆம் பந்தி தொடர்பில், ஒருங்கிணைந்த அமைப்புக்களை நிறுவுவதற்கு அப்பால் அதன் உண்மையான கடமைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கமானது தாமதமின்றி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுடன், காணாமல் போனோர் அலுவலகம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருவதுடன், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்திற்கான சட்டமானது, குறித்த சட்டத்தினால் இழப்பீட்டிற்கான அலுவலகமொன்றை நிறுவுவதனை குறித்து நிற்கின்றது என்பது கவனிக்கப்படல் வேண்டும். இந்த நிறுவனங்கள், அவற்றுக்கு மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை ஆராய்ந்து, உறுதிப்படுத்தி, அங்கீகரித்து, வெளிப்படுத்துவதுடன், நேர்மை மற்றும் இயற்கை நீதிக்கான கோட்பாடுகளின் அடிப்படையில் அதன் சட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கான நிதியானது, 2019ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

19ஆம் பந்தி தொடர்பில், 2018 அக்டோபர் மாதத்தில் இயற்றப்பட்ட இழப்பீட்டிற்கான சட்டத்தின் கீழ், இந்த அலுவலகத்திற்கு நியமனம் செய்யப்படுவதற்காக அரசியலமைப்பு பேரவையினால் மூன்று ஆணையாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் காணாமல் போனமைக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டுள்ள காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 500 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு 2019 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

2018ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி மன்னாரில் கண்டடெடுக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பில் குறிப்பிடும் அறிக்கையின் 23வது பந்தி தொடர்பில், இந்த விடயமானது அதன் இயல்பு தொடர்பில் அணுகுவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதொரு விடயமாகும். முன்கூட்டியே கருதப்பட்ட கருத்துகளுக்கு மாறாக, குறித்த மீட்கப்பட்ட மனித எலும்புகளுக்கும், மோதலுக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தினால் வசதிகள் அளிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் ஆய்வகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த எலும்புகள் இலங்கையின் பெரும்பகுதி ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியின் கீழ் காணப்பட்ட கி.பி. 1499 - 1719 வரையான காலப்பகுதிக்கு உரியன என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது, குற்றச்சாட்டுகள் மற்றும் வெறும் தகவல் சேகரிப்பு ஆகியன நியாயமில்லாத கருத்துக்களை முன்வைப்பதற்காக முன்கூட்டியே தீர்மானிக்கப்படக்கூடாது என்பதை நிரூபிப்பதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு இதுவாகும். சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நடைமுறைகளின் வாயிலான விசாரணை நடைமுறைகளின் தேவைப்பாட்டினையும், ஆதாரமற்ற அனுமானங்களின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதன் விளைவையும் குறித்து நிற்கும் மற்றுமொரு சம்பவம் இதுவாகும்.

அறிக்கையின் 25வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பில், 'இழப்பீட்டிற்கான அலுவலகம்' தொடர்பான சட்டமூலத்தின் உள்ளடக்கத்திற்கு உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களானது, அரசாங்கத்தின் துறைகளின் சம்பந்தப்பட்ட அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதனை அங்கீகரிக்கும் எமது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புடன் இயைந்ததாக காணப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதும், பாராளுமன்றத்தால் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருதப்படுவதுமான இழப்பீட்டு சட்டம் தொடர்பான பரிந்துரைகள், குறித்த சட்டத்தின் அரசியலமைப்பு வாதத்தை உறுதிப்படுத்தும் ஒரு கட்டாய செயன்முறை ஆகும். மேலும், உங்கள் கவனிப்புக்கு மாறாக, உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் முன்னிலையில் நிவாரணங்களைப் பெற விரும்பும் நபர்களுக்கு அதன் பொருந்தும் தன்மையை விரிவுபடுத்துகின்றன, ஏனெனில், இந்த அலுவலகத்தினால் தனித்தனியாகவும், கூட்டாகவும் பெற்றுக்கொள்ளப்பட்டு, கவனம் செலுத்தப்படும் முறைப்பாடுகள் மனித உரிமைகள் மீறல் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக, இந்த சட்டத்தின் 27வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள உயிரிழப்பு அல்லது அவர்களின் நபர் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதன் விளைவாக சேதம் ஏற்பட்டுள்ள நபர்கள் - நீண்டகால மற்றும் கடுமையான சேதங்களின் இயல்புகளால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் தனிநபர்கள், குழுக்கள் அல்லது சமூகம் ஆகிய விடயங்களையும் உள்ளடக்குகின்றது.

கௌரவ உயர் ஆணையாளர் அவர்களே,

பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதமானது உலகெங்கிலும் எதிர்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், கடந்த ஆண்டு இந்த சபையின் முன்னிலையில் நான் கூறியது போல், மோதலின்போது இலங்கையின் பாதுகாப்புப் படைகளினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு குழுவிற்கு எதிரானதேயன்றி, எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரானது அல்ல. சமீபத்திய வரலாற்றில் முதல் முறையாக வேண்டுமென்றே பொதுமக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பயங்கரவாத குழுவினரின் செயல்முறையானது உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதக் குழுக்களால் தற்போது பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டிருந்ததுடன், தற்போது அந்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டு செயற்படுகின்றன.

எனவே, குற்றப் பொறுப்புடைமை சம்பந்தப்பட்ட 27 மற்றும் 29வது பத்தியிலுள்ள அம்சங்களில், இலங்கையின் யாப்பு மற்றும் நீதிச் செயன்முறைகளுக்கேற்ப இலங்கை அதன் அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்துகின்றது என மீள எழுதப்படவேண்டும். எனினும், மேலே சொல்லப்பட்ட பத்தியில் ஒட்டு மொத்த ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை குற்றவியல் நீதி ஒழுங்கானது குற்றச்சாட்டுக்களின் தன்மை மற்றும் குற்றங்களின் சிக்கல்களுக்கேற்ப செயற்பட முடியாது என்பது தவறாகும். மாறாக இலங்கையிலுள்ள நீதி ஒழுங்கு சிக்கலான குற்றங்களை கையாள்வதற்கு போதுமானளவு ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட குற்ற விசாரனைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சட்ட செயன்முறைகளுக்குக் கீழால் நடாத்தப்படுவதற்கும் இடையிடையே நீதிப் படிமுறைக்கேற்ப கண்கானிக்கப்படுவதற்கும் விசாரனை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. எந்தவொரு சிக்கலான குற்ற விசாரனையும் அதிக நேரத்தை கொள்வனவு செய்யும். ‘பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் செயன்முறை’ என அறிக்கையின் 20வது பத்தியின் ஒப்புதல் பல்வேறு துறைகளிலான கணிப்பீடுகளை வேண்டிநிற்பதோடு நேரமும் தேவைப்படுகின்றது. அது சொல்லப்பட்ட வலியுறுத்தலை ஸ்தாபிக்கின்றது என்பதற்கான ஓர் குறிகாட்டியுமாகும். மேலும், குற்றங்களின் சிக்கல் மற்றும் குற்றச்சாட்டுக்களின் தன்மைகளுக்கேற்ப அவற்றை கையாள்வதற்கு இலங்கையின் குற்ற நீதி ஒழுங்கின் விதந்துரைக்கப்பட்ட இயலாமையை நீக்குகின்றது.

மேலும், 2015 இலங்கை தொடர்பான விசாரனை அறிக்கையிலோ அல்லது வேறு ஏதும் உத்தியோகபூர்வ ஆவணங்களிலோ தனிநபர்களுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுகளோ அல்லது மனிதத்துக்கெதிரான குற்றச்சாட்டுக்களோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டிய அம்சமாகும். சேவையில் இருக்கின்ற அல்லது ஓய்வுபெற்ற இலங்கை பாதுகாப்புப் படை அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களது உரிமைகளை பிடுங்குவது அநீதியாகும்.

மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் மற்றும் இந்த சபையின் அறிக்கைகளில் யுத்தத்தின் கடைசி கட்டங்களின்போது சொல்லப்படுகின்ற மரணங்களின் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை திரும்பத்திரும்ப இடம்பெற்றிருக்கின்றது. இந்த வலியுறுத்தல்கள் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா முகவர்கள் மேலும் ஐ.சி.ஆர்.சி உட்பட ஏனைய சர்வதேச நிறுவனங்களின் சுதந்திரமான கணிப்பீடுகளுக்கும் நேரடியாக முரண்படுவதுடன் யுத்தத்தின் கடைசி கட்டங்களின்போது கொழும்பிலிருந்த ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு உத்தியோத்தர் வெளியிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டுகின்ற 12 ஒக்டோபர் 2017 அன்று ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரபுக்களின் இல்லத்தில் திருத்தியமைக்கப்பட்ட விடயங்கள் மட்டுமல்லாது, பொதுத்தளங்களிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் எழுத்துக்களுக்கும் முரண்படுகின்றன .

உண்மையை கண்டறிவதற்கு அவசியமான மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம் உள்ளடங்கிய நிறுவனங்களால் மேலே குறிப்பிடப்பட்ட தகவல் தொடர்பாக அதிக கரிசனை காட்டப்படாமையானது தவறாகும் என இலங்கை அரசு விசுவாசிக்கின்றது.

பத்தி 31 ஐ பொறுத்தவரை, நாட்டின் ஏனைய அரசியல் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும்கூட யாப்புச் சீர்திருத்தம் பாராளுமன்ற விதிமுறைகளுக்கேற்ப தொர்ந்து நடைபெற்றுவருகின்ற ஓர் செயன்முறையாகும் என்பது குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும். இந்தச் செயன்முறை இலங்கையின் பலதரப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் தீர்ப்பதை வேண்டிநிற்கின்ற அதேவேளை அனைத்து பங்குதாரர்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளவும் வேண்டுகின்றது.

கௌரவ உயர் ஆணையாளர் அவர்களே,

32ம் பத்தியை பொறுத்தவரை பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்டவாக்க வரைவு பலதரப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெற்றுள்ளது. மேலும் சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளோடு ஒத்துச் செல்வதனை உறுதிப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட வரைவை வளர்த்தெடுப்பதில் முழுமையாக ஈடுபட்ட ஐ.நா முகவர்களிடமிருந்து தொழிநுட்ப உதவிகளையும் பெற்றுக்கொண்டது. இந்த செயற்பாட்டில், உயர் நீதிமன்றத்திற்கு முன்னர், முன்மொழியப்பட்ட சட்ட மசோதாவின் உள்ளடக்கங்களை விவாதிப்பதற்கு அனைத்து பங்குதாரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதன்படி, விவாதிக்கப்பட்ட பகுதிகள் உயர் நீதிமன்றத்தின் கவனத்தைப் பெற்றது. மேலும் மசோதாவின் உள்ளடக்கங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கள் சிவில் சமூகங்களை உள்ளடக்கி உறுதியான விவாதங்கள் நடைபெற்ற பாராளுமன்றத்திலுள்ள சர்வதேச உறவுகளுக்கான துறை மேற்பார்வைக் குழுக்கு முன்னிலையில் இருக்கின்றன. மேலும் இலங்கையின் சிவில் சமூகத்தின் குறிப்பிட்ட சில பகுதியினர் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குவதற்கும் பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களை கையாளக்கூடிய மேலதிக எந்தவொரு சட்டவாக்கத்தை அறிமுகப்படுத்தாமல் இருப்பதற்கும் பரிந்துரைத்திருக்கின்றனர் என்பதனையும் குறித்துக் காட்டுவது பொருத்தமாகும். சர்வதேச உறவுகளுக்கான துறை மேற்பார்வைக் குழுக்கு முன்னிலையில் வைக்கப்பட்டுள்ள இவ்விவகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை சட்டமாக்குவதில் மேலதிக நீண்ட திட்டநோக்குடைய செயன்முறையொன்றை விளைவித்திருக்கின்றது.

பத்தி 35 ஐ பொறுத்தவரை, பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பூமிகளை விடுவிப்பதற்காக இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை சபை அங்கீகரித்திருப்பதனை இலங்கை மெச்சுகின்றது.

இலங்கைப் பாராளுமன்றத்தில் 14 மார்ச் 2019ம் திகதி நான் குறித்துக்காட்டியது போல, 2009ம் ஆண்டில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பூமிகளில் 75 வீதமே விடுக்கப்பட்டுள்ளது என உயர் ஆணையாளரின் அறிக்கையில் 35வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தரவானது சரியான தரவுடன் குறிப்பிடத்தக்களவு வித்தியாசப்படுகின்றது. மே 2009 முதல் பாதுகாப்பு படையினர் வைத்திருந்த 71,172.56 ஏக்கர் அரச காணிகளில் 63,257.48 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. 12 மார்ச் 2019 இல் 88.87 வீத காணிகள் உண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மே 2009 முதல் பாதுகாப்பு படையினர் வைத்திருந்த 28,215.29 ஏக்கர் தனியார் காணிகளில் 26,005.17 ஏக்கர் (92.16 வீதம்) 12 மார்ச் 2019 இல் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்படத்தக்க அளவீடுகள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளை விடுவிப்பதற்கு இலங்கை அரசால் வழங்கப்பட்ட மிகுந்த முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றது.

எனினும், எஞ்சிய காணிகள் அதற்கேயுரிய உரிமையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதினூடாக அவசியமான தேசிய பாதுகாப்பின் நோக்கில் தொடர்ந்தும் பாதுகாப்புப் படை தம் வசம் வைத்திருக்கும்.

முழுமையாக காணிகளை விடுவித்தல் மற்றும் மற்றும் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் (2018 யூன் 5 ஆம் திகதிய 2074/11 இலக்கம்) ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி பற்றிய சனாதிபதி செயலணியொன்றை நியமித்தல் தொடர்பில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக கடந்த வருடம் இச்செயற்பாடானது கணிசமான அளவுக்கு துரிதப்படுத்தப்பட்டது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். இரண்டு மாகாணங்களிலும் அபிவிருத்தி பற்றிய கண்கானிப்பு செய்தல் மற்றும் ஆலோசனைகள் வழங்கல் தொடர்பில் முறையாக கூடும் இந்த செயலணியானது கௌரவ பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கின்றது.

'உட்கட்டமைப்பு குறைபாடு' பற்றிய பிரச்சினைகள் தொடர்பில், 66,100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவை 2009 முதல் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கைச் சார்ந்த சிவிலியன்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இப்பணியானது 2019 ஆம் ஆண்டில் 'ஒவ்னர் டிறவன் மொடல்'  என்ற மாதிரியின் அடிப்படையில் 4,750 வீடுகளை  நிர்மாணிக்கும் பணியின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது 2019 யூன் மாதத்தில் முடிவடையும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முன்னேற்றத்தை காண்பதற்கு கௌரவ பிரதமர் அவர்கள் முனைப்பான ஆர்வத்தை கொண்டிருந்தார். அவரின் பரிந்துரைக்கு அமைவாக 10,000 வீடுகள் நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2015-2018 காலப்பகுதியில் இருந்து இடம்பெற்றுள்ள ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்கள் பின்வருமாறு,

  1. வாழ்வாதார உதவி-23,548 குடும்பங்கள் (குடும்பத்திற்கு ரூபா 100,000 வீதம்)
  2. பொது வீட்டுக் கிணறுகள்-1,817
  3. நீர் இணைப்புகள்- 10245(குடும்பத்திற்கு ரூபா 25,000 வீதம்)
  4. மின்சார விநியோகம்-14,374 குடும்பங்கள்
  5. உள்வாரி பாதைகள்-254
  6. சுகாதார வசதிகள்-14238 குடும்பங்கள்( குடும்பத்திற்கு ரூபா 60,000 வீதம்
  7. வைத்தியசாலைகள் / சுகாதரார நிலையங்கள்-56

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் பொருளாதார சேமநலன்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல அபிவிருத்தி கருத்திட்டங்களின் சிலவற்றையே மேற்படி விபரங்கள் பிரதிபலிக்கின்றன.

அவர்கள் மீண்டும் திரும்புவதற்கு முன்னர் சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக எழுப்பப்பட்ட கரிசனை  தொடர்பில் குறிப்பிடப்பட வேண்டியுள்ளது யாதெனில் அவ்வாறான அரசாங்க கொள்கையொன்று இல்லையென்பதாகும். மாறாக, பாதுகாப்பு படையினர் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஆகியவற்றை கருதி சொத்துக்களை கையளிப்பதற்கு முன்னர் இராணுவ உட்கட்டமைப்புக்களை நிர்மூலமாக்கியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையில் வடக்கு மாகாணத்தையோ அல்லது கிழக்கு மாகாணத்தையோ அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியையோ 'காலணித்துவமயம்' செய்யும் கொள்கை இல்லை என்பதை, உயர் ஆணையாளர் அவர்களே, உங்களுக்கு குறிப்பிட வேண்டும். அவர்களின் காணிகள் வன உள்ளடக்கம் அல்லது தொல்பொருள் கருத்திட்டங்கள் என்ற வகையில் பிரகடனப்படுத்தப்படுவதால் காணி உரிமையாளர்கள் அவர்களின் காணிகளை இழக்கின்றார்கள் என்ற கருத்து தொடர்பில் தெளிவாகவும் உறுதியாகவும் கூறவேண்டியது யாதெனில்,அரசாங்கமானது அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதாகும். இருப்பினும், வனநிலம் மற்றும் தொல்பொருள் கருத்திட்டங்களை பாதுகாத்தல் என்பது சுற்றாடல் மற்றும் காலாசார மறபுரிமையை பாதுகாத்து பேணவேண்டும் என்பதன் அடிப்படையில் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக எந்தவொரு நாட்டிற்கும் வழங்கப்பட்டுள்ள ஆணையாகும் என்பதையும் நிணைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அவ்வாறு சம்பந்தப்பட்ட வனநிலம் மற்றும் கலாசார மறபுரிமை ஆகியவற்றை இனங்காணும் வேளையில் சம்பந்தப்பட்ட மாகாணங்களின் நிர்வாக அமைப்புகளுடன் ஆலோசனையும் பெறப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்களை தடுத்தல் மற்றும்  மனித உரிமைகள் பற்றிய அவசர நிலைமைகளுக்கு துரிதமாக பரிகாரம் காணல் தொடர்பாக இந்த பேரவைக்கு உள்ள ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், முரண்பாட்டிற்கு பின்னரான மாற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகள் கடந்துவந்துள்ள ஒப்பீட்டளவிலான அனுவபங்கள் தொடர்பில் இந்த பேரவை நன்கு அறிந்துள்ளது என்பதையும் இலங்கை நம்புகின்றது. இந்த நாடுகள் நிலைமாறுகால நீதி பொறிமுறை மற்றும் அவசியமான தரம், அனைத்தும் உள்ளடங்கிய தன்மை,விரிவுத்தன்மை மற்றும் விளைவுகளின் நிலைபேண்தகைமை ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை பேண்வதற்கு ஆழ்ந்த ஆர்வத்தை மேற்கொண்டுள்ளன.  இவ்விடயமானது இலங்கையைப் போன்ற நாடுகள் தொடர்பில் உண்மையாகும். ஏனெனில், வேறு நாடுகளில் முரண்பாட்டிற்கு பின்னர் காணப்பட்ட சூழ்நிலைகள் போலன்றி இலங்கையின் சவாலானது 'தேசத்தை கட்டியெழுப்பல்' என்பதற்கு பதிலாக 'சமாதானத்தை கட்டியெழுப்பல்' என்பதாகும். பரிகாரம் காணல் மற்றும் சமூக சகவாழ்வு பற்றிய பயனுறுதியான மற்றும் காலாசார ரீதியில் உணர்பூர்வமான மற்றும் சாத்தியமான நடைமுறைகளை காண்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமானது உறுதியாகவுள்ளது.

இருப்பினும், இலங்கையில் குறைகாண்பவர்களால் சுமத்தப்பட்டுள்ள ஆதாரவமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பிரயோகிக்கப்பட்டுள்ள தரங்களுடன்  ஒப்பீட்டளவில் நோக்கும் வேளையில்  இலங்கை அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்பட்டுள்ள ஆதாரத்தின் தரநிலையானது கணிசமான ஒழுங்கின்மையை கொண்டுள்ளதால் பிரச்சினையாகவும் குழப்பமாகவும் உள்ளது. இந்த சூழ்நிலையில்,  உயர் ஆணையாளரின் அறிக்கையின் 23ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னார் புதைகுழி விடயமானது ஏற்கனவே விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது பல மாதங்களுக்கு முன்னர் தொகுக்கப்பட்டுள்ள அதேவேளை,  அவ்வறிக்கையானது வெளியிடப்பட்ட வேளையில் தடயவியல் சாட்சிகளின் அடிப்படையில் எச்சங்களின் காலம் பற்றிய தீர்மானமொன்று கொடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த இந்த முக்கியமான விபரத்தை நாங்கள் காண்பதில்லை. மேலும், இந்த அறிக்கையானது 'எதிர்காலத்தில் ஏனைய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவதை  எதிர்பார்கலாம்' என்றும் முன்னூகின்றது. இந்த வகையிலான பாரியளவு மற்றும் பாரதூரமான விடயம் பற்றிய இவ்வகையான அனுமானம் பகிரங்க அறிக்கையொன்றில் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அறிக்கையில் காணப்படும் ஏனைய அனுமானங்கள் தொடர்பில் சந்தேகங்களையும் ஏற்படுத்தலாம்.

ஒரு கோட்பாட்டில்  உண்மைகள் பொருந்தாமல் இருக்கும் வேளையில் அந்த கோட்பாடு மாற்றமடைய வேண்டும் என்று  மதிநுட்பம் போதிக்கின்றது. இருப்பினும், இலங்கை விடயத்தில் அத்தகைய மதிநுட்டம் பிரயோகிக்கப்பட்டதாக தெரியவில்லை. மன்னார் புதைகுழி விடயத்தில் உள்ளதைப்போன்று, உறுதியான ஆதாரத்தின் மூலம் இலங்கையை விடுவிக்கும் வகையில் இந்த கோட்பாட்டை பிழையென்று நாம் நிரூபித்தாலும், ஒரு விடயத்தில் இலங்கையை சிக்கவைக்க முயலும் சில சந்தேகப் பேர்வழிகளால் அத்தகைய விடயங்கள் மேலதிக விசாரரணைகளுக்கு ஓதுக்கி வைக்கப்படுகின்றன.

இதேவேளையில், முன்னர் குறிப்பிட்டதைப்போன்று முரன்பாட்டின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் மேண்டுமென்றே சிவிலியன்கள் பாதிக்கப்படுவதற்கு உடந்தையாக இருந்தனர் என்பதை மறுக்கும் சாட்சியங்கள் தோன்றும் வேளையில் இந்த சாட்சியானது மொத்தமாக புறக்கணிக்கப்படும்.

கௌரவ உயர் ஆணையாளர் அவர்களே,

ஓ.எச்.சீ.எச்.ஆர் ரின் 68ஆம் பந்தியானது (சீ) இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய பரிந்துரையான,  'சர்வதேச சட்டம் மீறப்பட்டமை மற்றும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டது பற்றிய குற்றச்சாட்டை விசாரிக்க ஹைபிரிட் நீதிமன்றத்தை தாபிக்கும் சட்டத்தை ஏற்றுக்கொள்ளல்' தொடர்பில் குறிப்பிடுகின்றது. இந்த விடயம் தொடர்பான எமது நிலைபாட்டை பின்வருமாறு தெளிவு படுத்துவதற்கு விரும்புகின்றேன்;

இலங்கை அரசாங்கமானது தற்போதைய மற்றும் முன்னாள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மற்றும் ஏனைய இடைமுகவர்களுக்கு உயர் அரச மட்டங்களில் பகிரங்கமாகவும் கலந்துரையாடல்கள் ஊடாகவும் நாட்டின் நீதி மன்ற செயற்பாடுகளில் பிரசைகள் அல்லாதோரை உள்ளடக்குவதில் உள்ள அரசியலமைப்பு மற்றும் சட்ட சவால்களை விளக்கியுள்ளது. அத்தகைய செயன்முறைகளில் பிரசைகள் அல்லாத நீதிபதிகளை நியமித்தல் செயற்பாடானது பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உறுப்பினார்களாலும் அதனைத்தொடர்ந்து கருத்துக்கணிப்பொன்றில் மக்களாலும் அரசியலமைப்பில் திருத்தமொன்றை மேற்கொள்ளாது செய்யமுடியாது.

இந்த சூழ்நிலையில்,  இந்த அடிப்படை யதார்த்தங்களை இணை-அனுசரணை நாடுகள் உட்பட ஏனைய நாடுகள் கலந்துரையாடல்களில் ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இந்த பொருத்தமின்மையான விடயங்கள் கடிதமொன்றின் மூலம் திருத்திக்கொள்ள வேண்டும்.  குறிப்பாக இலங்கையில் எமது நீதி, பொதுச்சேவை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவை  சுயாதீனம், எதிரிதிறன், தன்முனைப்பு மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை சமீபத்தில் எடுத்துக்காட்டியுள்ள இத்தகைய தருனத்தில்  சர்வதேச சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கும் புதுமையான, சாத்தியமான, உள்ளக பொறிமுறைகள் மற்றும் செயன்முறைகளை கண்டுகொள்வது தொடர்பில் இலங்கையானது  ஊக்கமளிக்கப்படல் வேண்டும்.  அப்போதுதான், உயர் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை போன்று 'பாதிப்புக்கு உள்ளானோரின் மற்றும் சமுதாயத்தின் நம்பிக்கையை வெற்றிகொள்வதற்கு' வழியமைக்கும் வகையில் இந்த விடயங்களை முடிவுக்கு கொண்டுவர எங்களால் முடியுமாக இருக்கும்.

நாம் அனைவரம் பலன்களை காண்பதற்கு ஆவலாக உள்ளோம், இருப்பினும், தாசாப்பதகால உணர்வுபூர்வ, சிக்கான பிரச்சினைகளுக்கு துரித விளைவுகளை காண்பிக்குமாறு  காலவரையறை மட்டக்குறிகளை விதித்தல் தோல்விக்கே இட்டுச்செல்லும். இலங்கையானது ஒரு சனநாயக நாடு என்ற வகையில், அதன் மக்களுக்கு சேமநல மற்றும் நிலைபேறான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முன்னுரிமைகளை வடிவமைக்கவேண்டும். மனித உரிமைகளை நிலைநாட்டி பாதுகாக்கும் இறுதியான நோக்கத்தை பின்பற்றும் அதேவேளையில், பல்வேறு வரலாற்று, கலாசார மற்றும் மத உணர்வுகள் முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும். இந்த பேரவை மற்றும் ஏனைய மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான இலங்கையின் ஈடுபாடு மற்றும் நெருக்கமான ஓத்துழைப்பானது  ஐக்கிய மற்றும் செழுமையான நாட்டில் பல்வகைத்தன்மையை மதிக்கும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகள், நீதி, மற்றும் கண்ணியத்தை கட்டியெழுப்புவதாக 2015ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் வழங்கிய அரசியல் உறுதிப்பாடு மற்றும் வாக்குறிதிகளின் அடிப்படையில் இருந்து இவை எழுப்புகின்றது.

கௌரவ உயர் ஆணையாளர் அவர்களே,

இந்த நிலைமாறுகால நீதி பொறிமுறைகளை வளர்ப்பதில், இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தை அமைப்பதற்கான நியாயமொன்று காணப்படுவதாக இலங்கை நம்பவில்லை.

அதாவது, குறிப்பாக உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதனை மேம்படுத்துவதற்கான விஷேட அறிக்கையாளரின் தொழினுட்ப ஆலோசகர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொழில்நுட்ப உதவியின் வாயிலாக, ஐக்கிய நாடுகள் தாபனம் மற்றும் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் நிபுணத்துவம் மற்றும் ஆதரவுடன் விரிவுபடுத்தப்பட்ட நன்மையை நாங்கள் வரவேற்கிறோம். ஏனைய இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்காளர்களால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் குறித்தும் நாங்கள் மேலும் பாராட்டுகிறோம். குறிப்பாக நீதி, வழக்கு மற்றும் விசாரணை அதிகாரிகள் தமது விடயப்பரப்புக்களில் சிறப்புத் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல் தொடர்பான மேலதிக தர கட்டியெழுப்புகையையும், முன்னெடுக்கப்பட்டு வரும் உள்நாட்டு நடைமுறைகளின் செயற்பாடு மற்றும் மதிப்பினை மேலும் மேம்படுத்துவதனையும் நாங்கள் மேலும் வரவேற்கின்றோம்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர் அலுவலகம், ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியோருடன் தொடர்ந்து அரப்பணிப்புடன் செயற்படுவதற்கும், சிவில், அரசியல் மற்றும் சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் ஆகியவற்றையும், எமது மக்களுக்கான நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஒருங்கிணைப்பதனையும் நோக்கிய எமது பயணத்தில் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close