புதிய ஐக்கிய நாடுகள் வதிவிட ஓருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துக்கான வதிவிட பிரதிநிதியுமான செல்வி. ஹெனா சின்கர் தனது நற்சான்றுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 2018 செப்டெம்பர் 5ஆம் திகதி சமர்ப்பித்தார்.
செல்வி. ஹெனா சின்கர் அவர்கள் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நிதியத்திற்காக 27 வருடங்கள் பணியாற்றியுள்ளார் என்பதுடன் தெற்காசியா உட்பட பல்வேறு பிராந்தியங்களில் மனிதாபிமான உதவிகள் பற்றிய சிரேஸ்ட முகாமைத்துவத்தில் 15 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளார். அவர் சிரியா, நேபாளம், கசகஸ்தான், மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நிதியத்திற்கான நாட்டின் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
2018 செப்டெம்பர் 07
Please follow and like us: