செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 07 அன்று இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஏழாவது பாலி செயல்முறை அமைச்சர் மாநாட்டில் மக்கள் கடத்தல், ஆட்கொள்ளை மற்றும் ஏனைய சர்வதேச குற்றங்கள் தொடர்பாக உரையாற்றுகையில், வெளிநாட்டமைச்சர் திலக் மாரபன அவர்கள் மக்கள் கடத்தலைக் குறைப்பதற்கும், அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புக்கள், சிவில் சமூகம் ஆகியவற்றுடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், அவர்களை பாதுகாப்பதற்கும், குற்றம் புரிந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்கும் விரிவான பிராந்திய அணுகுமுறையொன்றுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பாக வலியுறுத்தினார்.
அமைச்சு மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர் மட்டத்திலான ஆழ்ந்த கலந்தாலோசனையைத் தொடர்ந்து, ஓர் அமைச்சர் அறிக்கை மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களது சந்திப்பின் தலைவர் அறிக்கை என்பவற்றை மாநாடு அங்கீகரித்தது.
ஐ.நா செயல்முறையின் முக்கியத்துவம் மற்றும் ஏனைய பல்பக்க நிறுவனங்களை சர்வதேச பேச்சுவார்த்தைகள் நெறிமுறை உருவாக்கத்திற்கான வாகனங்களாக அடையாளப்படுத்தப்படுகின்ற இத்தருணத்தில், புலம்பெயர் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்கள் ஆகியவற்றை குறைப்பதற்காக இலங்ககையின் சட்டர்பூர்வ கடமைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், பாலி செயல்முறைக்கும் அமைச்சர் ஆதரவு தெரிவித்தார். ஒருங்கிணைந்த சர்வதேச குற்றங்களுக்கெதிரான ஐ.நா. சாசனம் மற்றும் அதன் 2015 நெறிமுறை, நாடுகளுக்கிடையான தத்தெடுப்பு சம்பந்தப்பட்ட சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான ஹேக் உடன்படிக்கை என்பவற்றில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதை குறித்துக்காட்டியதோடு, ஆட்கடத்தலை தடுத்து அடக்கக்கூடிய அடிப்படை சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களின் ஓர் அங்கமாக இலங்கை இருத்தல் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இலங்கையால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறிப்பிட்டார். மேலும் இலங்கையின் ஆட்கடத்தலுக்கெதிரான தேசிய படையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்பு முறைமை மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற, தடுப்பு, பாதுகாப்பு, வழக்கு, கூட்டாண்மை என்ற நான்கு தூண்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஐந்தாண்டு மூலோபாயத்திட்டம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக தலைவர்களுடன் அமைச்சு அமர்வில் இலங்கை விவகாரங்களுக்கு தலைமை தாங்கிய நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மற்றும் புத்த சாசன பிரதி அமைச்சர் சாரதி துஷ்மந்த அவர்கள் வெளிநாட்டமைச்சர் மாரபன அவர்களுடன் இணைந்து கொண்டார்.
இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் ரெட்னோ மர்சுதி, அவுஸ்திரேலிய உள்விவகார, குடிவரவு மற்றும் எல்லைப்பாதுகாப்பு அமைச்சர் பீடர் டுட்டன் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வில்லியம் லேசி ஸ்விங்க் ஆகியோருடன் அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.
அமைச்சர் மாரபன அவர்கள், அவரது கருத்துக்களின் போதும் இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் ரெட்னோ மர்சுதி அவர்களுடனான சந்திப்புகளின்போதும் இந்தோனேசியாவிலுள்ள லொம்பொக் தீவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலங்கையின் ஆழந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
மாநாடு மற்றும் குறித்த சந்திப்புக்களில் வெளிநாட்டமைச்சர் திலக் மாரபன அவர்களுடன் நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மற்றும் புத்த சாசன பிரதி அமைச்சர் சாரதி துஷ்மந்த, இந்தோனேசியா மற்றும் ஆசியானுக்கான இலங்கையின் தூதுவர் தர்ஷன எம் பெரேரா மற்றும் வெளிநாட்டமைச்சு, நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மற்றும் புத்த சாசன அமைச்சு, இந்தோனேசியாவிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பலரும் இணைந்து கொண்டனர்.