2018 ஆகஸ்ட் 4ஆந் திகதி சிங்கப்பூரில் நடைபெற்ற 25ஆவது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் மட்ட சந்திப்பில் இலங்கையின் தூதுக்குழுவினருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் தலைமை தாங்கினார்.
1994ஆம் ஆண்டு தாய்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆசியான் பிராந்திய மன்றமானது ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான அடிப்படை மன்றமாவதுடன், இது பிராந்தியத்தின் சமாதானத்திற்கான சவால்கள், பாதுகாப்பு மற்றும் சௌபாக்கியத்தினை அங்கீகரிப்பதன் வாயிலாக பிராந்திய அபிவிருத்தி மற்றும் சௌபாக்கியத்தினை மேம்படுத்த எதிர்பார்க்கும் அமைப்பாக விளங்குகின்றது.
இந்த மன்றத்தில் இலங்கையின் அறிக்கையை குறிப்பிடுகையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாரப்பன அவர்கள் கடல்வள பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை கட்டியெடுப்புவதற்கான அளவீடுகள் மற்றும் தவிர்ப்பு இராஜதந்திரம் ஆகியவை உள்ளடங்கலாக இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும், பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார ஆற்றல் மற்றும் சௌபாக்கியத்தை நிலைத்திருக்கச் செய்தல் தொடர்பிலும் சிறப்பித்துக் கூறினார். ஆசியான் பிராந்திய மன்றத்தின் ஒத்துழைப்பு தொடர்பிலான விடயங்களின் நிலையான முன்னேற்றத்தினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் வரவேற்றதுடன், அந்த நடைமுறைகளுக்கு தங்குதடையின்றி ஆதரவு நல்கினார்.
ஆசியான் பிராந்திய மன்றத்தின் துணைப்பாகமாக, புரூனே, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு மற்றும் கம்போடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுடன் பல்வேறு இருதரப்பு சந்திப்புக்களில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன அவர்கள் ஈடுபட்டதுடன், பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்களில் கலந்துரையாடினார்.
இலங்கைத் தூதுக்குழுவானது, சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களை உள்ளடக்கியிருந்தது.
05 ஆகஸ்ட் 2018