சேர்பியாவின் முதலாவது பிரதி பிரதம அமைச்சரும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிகா தாச்சிச் அவர்களின் இலங்கைக்கான விஜயம்

சேர்பியாவின் முதலாவது பிரதி பிரதம அமைச்சரும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிகா தாச்சிச் அவர்களின் இலங்கைக்கான விஜயம்

A

 

வர்த்தகம் மற்றும் வியாபார பிணைப்புக்களையும், மக்களுக்கு - மக்கள் ஒத்துழைப்புக்களையும் மேம்படுத்துவதற்கான மார்க்கங்களை கண்டறிவதற்கு இருதரப்புக்களும் உடன்பட்டன

 

சேர்பியாவின் முதலாவது பிரதி பிரதம அமைச்சரும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிகா தாச்சிச் தனது இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று நிறைவு செய்தார்.

இந்த விஜயத்தின் போது, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரை அமைச்சர் தாச்சிச் சந்தித்தார்.

அமைச்சர் மாரப்பனவுடனான கலந்துரையாடல்கள், பரந்துபட்ட இருதரப்பு மற்றும் பூகோள பிரச்சினைகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தன. முன்னோக்கிச் செல்வதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக, கட்டமைக்கப்பட்ட முறையில், குறிப்பாக இலங்கையின் விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் கட்டிட நிர்மாண துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள்; கல்வி, விளையாட்டு, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளிலான ஒத்துழைப்புக்களை அதிகரித்தல்; மற்றும் சேர்பியாவிற்கும், இலங்கைக்குமிடையிலான வீசா நடைமுறைகளை இலகுபடுத்துதல் போன்றவற்றின் மீதான இரண்டாம் சுற்று இருதரப்பு வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளை சாத்தியமானளவில் விரைவில் நடத்துவதற்கு இரண்டு அமைச்சர்களும் உடன்பட்டனர்.

குறிப்பாக இருவழி சுற்றுலாவினை அதிகரிக்கும் நோக்கில், இலங்கைக்கும் சேர்பியாவிற்குமிடையிலான விமான சேவைகள் உடன்படிக்கையொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சார்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களும், சேர்பியா சார்பில் அமைச்சர் இவிகா தாச்சிச் அவர்களும் இதில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையும், சேர்பியாவும் நெருக்கமானதும், வரலாற்று ரீதியானதுமானதொரு உறவினை அனுபவித்து வருவதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்களின் போது, மக்களுக்கு - மக்கள் பிணைப்புக்களை மேலும் வலுவூட்டுதல், வியாபார பிணைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் அரசாங்கங்கள் மட்டத்திற்கு இடையிலான பாரிய பங்காண்மை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2018 மே 08ஆந் திகதி

TAMIL- PDF

 

SLPM-DPMSrb DepPM-Spkr

DSC_6769

DSC_6803

DSC_6848

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close